கடவுளுக்கு எதற்கு சிரமம்
ரயில் பிரயாணி ஒருவர் பிளாட்பாரத்தில் டீ விற்றுக் கொண்டு போனவனைக் கூப்பிட்டு டீ வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே காசு கொடுக்காமல் தாமதப்படுத்தினார்.
ரயில் அதற்குள் பறப்பட்டுவிட்டது. டீ விற்கும் பையனுக்குக் காசும் கிடைக்கவில்லை. பிளாஸ்டிக் டீ தம்ளரும் நஷ்டம்.பக்கத்திலிருந்த அவனது நண்பன் அவனைச் சமாதானம் செய்தான்.
”கவலைப்படாதே..! கடவுள் அந்த ஆளைக் கவனித்துக் கொள்வார்..!”
டீ விற்ற பையன் சொன்னான்.
”கடவுளுக்கு எதற்கு சிரமம். என் ‘டீ’யே கவனித்துக் கொள்ளும்…!
நன்றி ;Jokes Bank (தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)