கண்ணன் என் காதலன்
கார்மேகம் குழைத்தெடுத்து
வர்ணம் பூசிய என் நாதா
உன் பொன்முகம் காண
வாடுகிறேன் வா வா கோபாலா .
மாது மேல் மையல் கொண்ட
மதுசூதனா
வானில் மதியாகி தேயாதே
என் கேசவா .
காதலெனும் போதை கொண்டு
ராதை நான் தவித்திருக்க
கோபியர் கூட்டத்தோடு
கொஞ்சல் என்ன என் தேவா.?
என் எண்ணங்கள் கொண்டது
மோகம் தான்
கலியுகத்தில் இதுவும் விரக தாபம் தான்.
முக்தி நிலை வேண்டாம் என் கண்ணா
இது பித்த நிலை
அறிந்திடு என் மன்னா .
ஊடலோடு கூடல் கொண்டு
உள்ளத்தால் நாமினைந்து
உனக்குள் என்றும் நான் வாழ
என்னை தேடி வா கிருஷ்ணா .
(என் கலியுக கண்ணனுக்கு.ராதையின் தூது)