என் காதல்

எல்லோருக்கும் காதல் வரும்
எனக்கும் வந்தது...
உங்களைப்போலவே...

அவளுக்கென ஒரு பெயர் உண்டு-அது
என் காதோரம் மட்டுமே ஒலிக்கும்
இன்னிசை சங்கீதம்.

எனக்காக...
என் நலனில் என்னைவிடவும் அக்கறை கொண்டவள்.
நீ என் அம்மா மாதிரிடா என அழகாய்
சொல்பவள்.

சுண்டு விரல் தீண்டலில் கூட
தீயாய்ச் சுடுபவள்.
தாயோடு இந்த உலகில்
எதனையும்
இணைத்துபார்க்க முடியாது,,,,
தாய்க்கு நிகர் இன்னொரு தாய் என்றாலும்
அது கூட பொருந்துவதில்லை.

அவ்வளவு ஏன்?
நானே என் தாயோடு யாரையும் ஒப்பிடுவதில்லை...

ஆனால்...
என்னவள் என்னை ஒப்பிட்டாள்.

அவளிடம் முதன் முதலாய் காதலை சொன்னபோது
எல்லா பெண்களுக்கும் இருக்கும் அதே வெட்கம்
அவளையும் விட்டு வைக்கவில்லை...

அவளிடம் இருக்கும் அவளுக்கான
கட்டுப்பாடும்...
அழகான மனசும் தான் என்னை அவளிடம்
காதல் வயப்பட செய்தது...


அதனால் தானோ என்னாவோ....
அவளை நான் பிரியும் படி ஆகி விட்டது.
அதே கட்டுப்பாடு அவளை இப்படி
பேச செய்தது....

அதெல்லாம்(காதல்) சொன்னா
உண்மையா இருக்கனும் தங்கம்..
இப்ப ஓகே சொல்லிட்டு
அப்புறம் கஷ்ட படுத்த எனக்கு இஷ்டம் இல்ல...
அம்மா அப்பாவ நெனச்சுக்க..
குடும்பத்த நெனச்சு பாரு...
எல்லாம் சரியாய்டும்..
நா உன்ன மறக்க மாட்டேண்டா...
ஏன்னா?,,,,
நீ என் அம்மா மாதிரி.....

என்ற அவள் மனசில் நான் இல்லாமல் இல்லை..
இவளுக்காக இவள் நினைவொன்றோடு
வாழ்நாள் முழுதும் கழிப்பதில்
தவறொன்றும் இல்லை...

காதலோடு நான் ...


செம்மொழி சிபிராம்.

எழுதியவர் : sibiram (20-Mar-15, 5:38 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 132

மேலே