எங்க போச்சு

நல்ல brand ஷாம்பூ போட்டு குளித்து,
shave பண்ணி,
இதுவரை இருந்த பவுடர் , perfume ஐ தூசி தட்டி,
எடுத்து , உபயோகித்து,
மாப்பிள்ளை வரவேற்பு இல்லாத குறையில்,
பாட்டுக்கு ஆடும் குதிரை இல்லாமல்,
கர்ஜிக்கும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்,

licence எடுக்க.....


ஓட்டை இல்லாத கூரையில்,
நீண்ட வரிசையில் நான் நின்றிருக்க,

தூரத்தில் ஆபீசர் இருக்கும் இடம் எனக்கு கீழே,
என்றது,
மின் விசிறி.
இலையின் அரும்பில் நிற்கும் நீர் போல,
வியர்வை துளி,
இரு புருவங்களுக்கு இடையில் போடப்பட்ட
சந்தன பாலத்தையும் உடைத்தது.
நீர் விளிம்பு தேடி ஓடி வர,
தாமதம் ஒரு நொடி,
சேகரித்த பல துளிகள்,
ஒரு துளியாய்,
கீழே விழப்போகும் வியர்வை துளியை,




காற்று எங்கு எடுத்துச்சென்றிருக்கும்..........

எழுதியவர் : baalaa (21-Mar-15, 8:52 pm)
Tanglish : yenga pochchu
பார்வை : 275

மேலே