பொய்

பொய் வாழ்வியலின்
அங்கம் ...!
உயிருள்ளவன் ஒவ்வொருவரும்
உள்ளத்தில் ஒரு பொய்யாவது
உள்ளவன்....!

பொய்யும் மனிதனும்
ஒருவரையொருவர் புறந்தள்ளுவதில்லை ..!

திருமணம் ஒன்றிற்கு
ஆயிரம் பொய்கள் கூட..
அன்றாட வாழ்க்கைக்கு
ஒரு பொய்யாவது
அவசியமாகி விடுகிறது ..!

பொய் ...
ஆபரணமாகிவிடுகிறது ..!
அன்றாடும் உடுத்தும்
ஆடைகளை போல..!

பொய் என்பதே இல்லை எனில் ..
. அன்றாட நிகழ்வுகளில் ..

ஆசிரியரிடம் மாணவனுக்கு
அடி கிடைக்கும் !

அம்மாவிடம் அப்பா
மாட்டி கொள்வார்...!

பெற்றோரிடம் பிள்ளைகள்
தண்டிக்கபடுவார்கள்..!

அதிகாரிகளிடம் அலுவலர்கள்
அகப்பட்டு கொள்வார்கள் !

நீதிமன்றங்களில் வழக்குகளே
இருக்காது !

அரசியல்வாதிகள்
ஆட்சிக்கு வரமுடியாது !

சாமியார்கள்
சம்பாதிக்க முடியாது !

வியாபாரிகளுக்கு
வியாபாரமே நடக்காது!

ஏதேனும் ஒரு வகையில்
எல்லா மனிதனுமே
ஒரு பொய்யாவது
ஒரு நாளைக்கு சொல்வது என்பதில்
உறுதியாய் இருக்கிறான்..

ஆதலால் தான்..

குழந்தையையும் தெய்வமும்
ஒன்று என்றனர்..- ஆம்
இரண்டுமே பொய் சொல்வதில்
ஏனெனில் - இரண்டுமே
பேசுவதில்லை ..!

பொய்..
இன்று காலத்தின் கட்டாயம் ..!

ஆம்..
இப்போதெல்லாம்
"மழை கூட பொய்த்து விடுகிறது...!"

எழுதியவர் : NILAPRIYAN (25-Mar-15, 12:18 pm)
Tanglish : poy
பார்வை : 87

மேலே