அக்னிப்பிரவேசம்-இது கவிஞனின் ஆத்ம உணர்வு

நான் அந்நியனின்அணுகுண்டினால் அள்ளிவீசப்பட்ட சடலம்!
என்உடல் எரிந்துகொண்டிருக்கிறது!இரத்தங்கள் யாவும்சிவந்து கொண்டிருக்கிறது!தீயின்அழுத்தத்தால்என்
ஆன்மாவீங்கிகொண்டிருக்கிறது!நிலம்,சடலங்களைசகித்து
கொண்டிருக்கிறது!
அதன் முதுகுப்புறம் புடைத்துகொண்டிருக்கிறது!
அதில் போராளிகளின் சடலங்கள்திணிக்கப்பட்டு
கொண்டிருக்கிறது!
சவக்குழியைவிட்டு
எழுந்திடப்பார்க்கிறேன்!
எரிந்த கால்கள்முறிந்திடும் என்பதால்நெருப்புக்குள்ளே
நெளிகிறேன்!எரியும் என் சடலத்தின்அருகேஒருவன்,
ஒடிந்தகாலுடன்
ஓடிவருவதை
பார்க்கிறேன்!...
அவனைகாப்பாற்ற நினைத்துஎன் கையைநீட்டினேன்!.
.அய்யோ!எனதுகை,
ஒருகைப்பிடி
சாம்பலானதால்,கதறித்துடிக்கிறேன்!அய்யோ!..தீயின்கோரம்,
என்வீரத்தசைகளைவெறியூட்டுகிறதே!என்விந்துவின் வீரியம்,வெட்டப்பட்டுவெடிக்கிறதே!அவலம்!அவலம்!..நான் கண்தானம்செய்யப்பார்த்தேன்!

வேண்டாம்!வேண்டாம்!
இந்த அருவறுப்புதேசத்தைப்பார்த்து,
ஆட்டுச்சடலங்களை வைத்து
ஆட்சிசெய்யும்தேசத்தை
பார்த்துப்பார்த்துபாவம்தேடியது,
அந்தகண்கள்!அக்னியே!பாவிகளைப்பார்த்துபயந்து
நடுங்கியஅந்தகண்கள்,
இனியும்எனக்குவேண்டாம்!.. .

அக்னியே!
ஆவிகளின் ஆண்மையே!..
ஆணையிடுகிறேன்!
அந்தகண்களை,எரித்துவிடு!!!..

வெறிகொண்டசடலமெல்லா
வெடிக்கிறதே!
இந்த சடலம்எரிந்தும்,கடைசி நொடிவரைகதறியதே!...
அது ஏன்?
கண்ணைபிடுங்கச்சொல்லி
கட்டளையிட்டதே!..அது ஏன்?...
வீரத்தசைகள்வெப்பத்திலும்
வெறிகொண்டதே!...
அதுஏன்?...எதனால்.

சுடுகாடும்சிரிக்கிறதே! ஆனாலும்சுருண்டு கிடக்கும்சடலம் ஆனேனே நான்!...அய்யோ!.. எனநினைத்ததே!..அதுஏன்?

இடுகாட்டுத்தலைவன்
உடன்கட்டைஏற
இழுத்துச்செல்லவருகிறானே!எங்குபோனார்கள் அந்தகாரிகைகள்!

கணவனைத்தேடியா?அந்தோ! விழிபிதுங்கிவெளியே கிடக்கிறதேஅவனா உன் கணவன்! 
பிணக்குவியல்களை
பாதுகாக்கபாடையைச்சுற்றி
நிற்கிறதேபசியோடு நரிகள்.
நீ, அங்குபோய்தேடிப்பார்!.
.அடுப்பெரிக்கஆளில்லாத காரணத்தால்,
அக்னிப்பஞ்சம் என,
இருண்டு கிடக்கிறதே!
அந்த இரவுக்குள்சென்று பார்!...ஆம்
அது இருண்ட மயானம்!...

பயப்படாதேஅதற்க்குள் சத்தங்கள்இருக்காது!
சபதங்கள் இருக்காது!
யுத்தங்கள் இருக்காது!ஆன்மாக்களின்அழுகிய
ஒலிகள்மட்டும்
ஆபாசமாய் இருக்கும்!

இன்னும் சற்றுஉள்ளே சென்று பார்!!

அய்யோ!...அய்யோ!...ஆ!....ஆ!....ஆ!....என்ன இது!....என்ன இது!...

பயப்படுகிறாயா!
புழுக்கள் மொய்த்தபுதிய மயானம்பார்த்தாயா!
இவர்களைஇரவுக்குள்மறைத்துவைத்து
வஞ்சகத்தகனம்செய்திருப்பதை
பார்த்தாயா!...
எடுத்து வைத்துஎரிப்பவனும் எரியாமல்கிடக்கிறான்!புதைத்தவனையும்தோண்டி
பார்த்தவன்புதையாமல்கிடக்கிறான்!...
கணவனாம்!கணவன்!
சற்று அங்கே பார்!

நிர்வாணம்நீதிபெற
சாமச்சுடுகாடுகள்சத்தியம் செய்து கொண்டிருப்பதைபார்!
நான்சொல்வது
ஒன்றும்புரியவில்லையா
நிர்வாணமயானம்
அமைத்து பெண்மை
பிரேதங்களைநிரப்புகிறார்கள் பார்!

பிரேதமாயினும்,
ஊடல்சஞ்சலம் வைத்துமயானசுகத்தில்தியானம் இருக்கிறார்கள் பார்!...


திரைச்சீலைகளை
உறுவி எரிந்ததால்
பிரேதச்சீலைகள்எரிவதைப்பார்!!...
கருகட்டிய ஒருகாரிகை வயிற்றில்,
கத்திகள்கலவிகொள்வதைபார்!

மயக்கம் வருகிறதா!மரணம் வருகிதா!

என் பின்னே
இன்னும்சற்று தூரம் நடந்துவா!...
நடக்கும்போதுசடலங்கள்காலில் படாதவாறு வா!

என் கணவர்!.....என்கணவர்!...
இவர்தான்!...இவரேதான்!....அய்யோ!....அய்யோ!.....அழாதே!..அழாதே!!...

உன் கணவர்
இவர்தான் என்றுஎனக்கு தெரியும்!

இவனால்இந்த தேசத்துக்கு
காவிகொடுக்கப்பட்ட
தலைகள்எத்தணையென்று
என்னால் எண்ணமுடியவில்லை!

சடலம்ஆவதற்க்கு முன்சபதமொன்றுகொடுத்தான்!.
.என் சடலத்தை எடுத்துமயானத்தீயில்
எரிக்கும்போதும்தீயினுள் இருக்கும்நெருப்பினிலே
நெளிந்து கொண்டிருப்பேன்!

எரியும்கால்களால்
எழுந்துநடக்க முயல்வேன்!
கால்ஒடிந்த ஒருவன்
என் அருகே
ஓடிவரும்போது,
அவனைகாப்பாற்ற
எரிந்துகொண்டிருக்கும்
என் கைகளை நீட்டுவேன்!

அப்போது
எனது கைகள்
ஒருகைப்பிடிசாம்பலாய் போனால்மீண்டும்
உயிர்த்து எழுவேன்,
ஒரு கவிஞனால்,
கவிதை வடிவில்.என்று கூறிஎதார்த்தமாய்விழுந்தான்!...
அவன்தான்
அந்நியனின்,அணுகுண்டால் அள்ளிவீசப்பட்டஒரு சடலம்!...

எழுதியவர் : ருத்ரா நாகன் (25-Mar-15, 11:54 am)
பார்வை : 102

மேலே