நீல மணி வண்ண கண்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நீல மணி வண்ண கண்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  16-Jun-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Mar-2015
பார்த்தவர்கள்:  289
புள்ளி:  53

என்னைப் பற்றி...

கவிஞனாகும் ஆசையில் பித்தனாகிகொண்டிருக்கும் புத்தனுக்கு எதிரான ஆன்மா நான் .. மரணத்திற்கு முதல் நாளாவது சாதிக்கும் நினைப்புடன் நம்பிக்கையுடன் வாழும் ஜீவன் நான்

என் படைப்புகள்
நீல மணி வண்ண கண்ணன் செய்திகள்
நீல மணி வண்ண கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2015 11:29 pm

பெண்ணே ...

உன் புன்னகை ...

உலக மலர்கள் ஒன்றுகூடி

கொண்டாடும் திருவிழா .....!!


கடவுளையே கனநேரம்

நினைவிழக்க செய்யும் அஸ்திரம் ....!!


ரூபாயின் மதிப்பை

சரிவடைய செய்யும் யுக்தி ...!!



வண்ணமயில்கள் தோகைவிரித்து

நடனமா செய்யும் விந்தை ..!!


மோனலிசாவையே

பொறாமை கொள்ளச்செய்யும் சூத்திரம் ..!!

மேலும்

நன்று 15-Apr-2015 12:18 am
நீல மணி வண்ண கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2015 10:48 pm

பெண்ணே ...

கோடியை தாழ்த்திவிட்ட

உன்

புன்னகையில்

பூபெய்துவிடுகிறது

பூக்கள் ...!!!

மேலும்

நீல மணி வண்ண கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2015 11:01 pm

பெண்ணே..

என் இதய அறையில்

சேமித்து வைத்திருக்கும் - காதலை

செலவழிக்க காத்துகொண்டிருக்கிறேன் ...!!

நீ.. " வெட்கப்படும் தருணத்திற்காக "...

மேலும்

அழகு .... 12-Apr-2015 9:13 pm
நல்ல கற்பனை தோழரே... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடாருங்கள்... 12-Apr-2015 1:58 pm
நல்லாயிருக்கு 11-Apr-2015 11:07 pm
நீல மணி வண்ண கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2015 11:41 am

பெண்ணே..

நீ...

என்னை பார்க்கும்போது

என் கண்களே ...

என்னை பாவியாக்குகிறது...!!!

உன் காதல் ...

மட்டுமே - என்னை

இரட்சித்து வருகிறது ...!!!!

மேலும்

நீல மணி வண்ண கண்ணன் - நீல மணி வண்ண கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2015 12:18 pm

பொய் வாழ்வியலின்
அங்கம் ...!
உயிருள்ளவன் ஒவ்வொருவரும்
உள்ளத்தில் ஒரு பொய்யாவது
உள்ளவன்....!

பொய்யும் மனிதனும்
ஒருவரையொருவர் புறந்தள்ளுவதில்லை ..!

திருமணம் ஒன்றிற்கு
ஆயிரம் பொய்கள் கூட..
அன்றாட வாழ்க்கைக்கு

மேலும்

iruthiyaga oru 'nach' onru kodutheerkal paarunkal. arumaiyilum arumai. vaalththukkal. 25-Mar-2015 9:53 pm
நல்ல பொருள் , முயற்சி .. இன்னும் தொடருங்கள் .. 25-Mar-2015 9:22 pm
நீல மணி வண்ண கண்ணன் - புதுமை தமிழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2015 4:44 pm

நேற்று வற்றவிட்டு
இன்று விற்றுவிட்டு
நாளை விக்கிக்கிடப்போமோ
துளி நீருக்காய்!!

மேலும்

அட ... படமும் , கவியும் அருமை . தொடருங்கள் .. 23-Mar-2015 9:39 pm
உண்மை 23-Mar-2015 5:29 pm
நன்றி சகோ 23-Mar-2015 4:50 pm
அட.. அசத்தல் 23-Mar-2015 4:50 pm
நீல மணி வண்ண கண்ணன் - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2015 2:42 am

இன்று....
மார்ச் 23 மாவீரன் தோழர் பகத்சிங், தோழர் சுகதேவ், தோழர் ராஜகுரு தூக்கிலிடப்பட்ட நாள்...
.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த பக்கங்களில் பகத் சிங்கின் பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடியாவர், இந்தியாவில் மார்க்சியத்தைப் பேசிய முதல்வருகளில் ஒருவர். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில்ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர்சாஹீதுபகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படு (...)

மேலும்

காந்தி மட்டும் வாங்கவில்லை தோழரே... இது பல புரட்சிப் போராளிகளின் கூட்டு முயற்சியே.... காந்தி அகிம்சை என்றே போராட்டம் நனத்திருந்தால் கிடைத்திருக்குமா இந்த சுதந்திரம்.... இதில் பெரும் பங்கு கொண்னவர்கள் நிறைய பேர் நேத்தாஜி, பகத்சிங் போற்றவர்கள் இல்லாமல் சுதந்திரம் கிடைத்திடவில்லை... புரட்சியே விடுதலைக்கு வித்திடும் 23-Mar-2015 1:25 pm
கண்டியுங்கள் ..அதற்கான சுதந்திரத்தை காந்தி என்ற மனிதன் தான் வாங்கி கொடுத்தார் அகிம்சை வழியில் .. 23-Mar-2015 1:05 pm
தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். ‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர். 1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள். பகத்சிங்கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார்.[24] தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது. 23-Mar-2015 12:39 pm
இது காந்தியை இழிவு படுத்தும் நோக்கதிற்காக பதிவிடவில்லை தோழரே.... இது உண்மை தான்..... நம்மை அடிமை படுத்திய ஆங்கியோரை எதிர்த்து நாம் அடிதடியில் இறங்க வேண்டாம்.. அகிம்சை முறையில் வெல்லலாம் என்று கூறிய அற்புத மனிதர் தான் காந்தி.. அனால் சுதந்திரப் போராட்டத்தில் தனது சக போராளியான பகத்சிங் தூக்கிட மட்டும் ஆதரித்தது எந்த அகிம்சை முறை என்று தெரியவில்லை... நம் நாட்டை அடிமை படுதிய அவனுக்கே அகிம்சை முறை போராட்டம்... நாம் நாட்டின் அடிமை தனத்தை விரட்ட வன்முறையை கையிலெடுத்த தோழர் பகத்சிங்'விற்கு தூக்கா??? என்ன நியாயம் தோழரே காந்தியின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன் தோழரே... 23-Mar-2015 12:20 pm
நீல மணி வண்ண கண்ணன் - பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2015 5:27 pm

கருவில் என் பாதம் கொண்டு உன்னை அழைத்தேன்
பொறு என்று சொல்லி என்னுடன் கதைத்தாய் !

ஈன்ற பொழுது முதல் என்னை உன் இமைபோல்
காத்தாய் உன் மடியில் !

உன் விழி மூடிய நாட்கள்லோ குறைவு
என்னை கவனிக்க உன் தூக்கம் துறந்தாய் !

என் பாதம் தரையில் நிற்க உன் பாதம்கொண்டு
நிற்க செய்தாய் !

மேலும்

நன்றி தோழரே 🙏 10-Apr-2018 10:45 am
நண்பரே!! ஆஹா அருமையான கவி வாழ்த்துக்கள் 24-Mar-2015 11:22 pm
அம்மா அகிலத்தின் அகராதி .. 20-Mar-2015 5:30 pm
நீல மணி வண்ண கண்ணன் - பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2015 5:27 pm

கருவில் என் பாதம் கொண்டு உன்னை அழைத்தேன்
பொறு என்று சொல்லி என்னுடன் கதைத்தாய் !

ஈன்ற பொழுது முதல் என்னை உன் இமைபோல்
காத்தாய் உன் மடியில் !

உன் விழி மூடிய நாட்கள்லோ குறைவு
என்னை கவனிக்க உன் தூக்கம் துறந்தாய் !

என் பாதம் தரையில் நிற்க உன் பாதம்கொண்டு
நிற்க செய்தாய் !

மேலும்

நன்றி தோழரே 🙏 10-Apr-2018 10:45 am
நண்பரே!! ஆஹா அருமையான கவி வாழ்த்துக்கள் 24-Mar-2015 11:22 pm
அம்மா அகிலத்தின் அகராதி .. 20-Mar-2015 5:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே