புதுமை தமிழினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புதுமை தமிழினி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  30-Oct-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Feb-2015
பார்த்தவர்கள்:  159
புள்ளி:  14

என்னைப் பற்றி...

கவிதைகளின் வாசகியாய்
வரிகளால் வலிகளை
பேசுபவள்!!

என் படைப்புகள்
புதுமை தமிழினி செய்திகள்
புதுமை தமிழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 1:37 pm

இலையுதிர் காலச் சருகாய் இதயம்
உன் காலடி தேடித் தொலைந்தும்
நீ வந்து போன வழி
பார்த்தே காத்திருக்கிறேனடா நான்!!
கரை தாண்டிய கானலாய்
உன் மௌனம் உயிர் குடிக்க,,
வெடிக்கும் நாடி விழியில் வழிய
வலித்தாலும் காத்திருக்கிறேனடா!!
உன் காது திருகி
கொட்டிய நேசம் நெஞ்சை பிசைந்து
மெழுகாய் உருகி மருகுதடா!
உன் தோளில் நான் சாய்ந்து
நாம் இசைத்த வயலின் இசையை
தனிமை இம்சித்தே வதைக்கிறதே!
நீ தந்த கனவுகள்
என் மெல்லிசைகளை
முள்ளாகித் துளைத்தாலும்
மரத்துப்போன மனமோ
மீண்டுமோர் வசந்தத்துக்காய்
கண்பூக்க பூத்திருக்குதடா!!
காலம் முடியும் முன்
உனக்காய் மூச்சுவிடும் என்முன்
காற்றாகி வருட வாராயோ என் சுவாசக்கா

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-May-2015 11:11 pm
காலம் முடியும் முன் உனக்காய் மூச்சுவிடும் என்முன் காற்றாகி வருட வாராயோ என் சுவாசக்காற்றே!! காதல் காத்திருப்பு வரிகள் வலிகளுடன் அருமை நட்பே... 09-May-2015 4:45 pm
இலையுதிர் காலச் சருகாய்.......நல்ல தொடக்கம் ! கவி இனிமை ! //////முல்லாகித்//முள்ளாகித்....? 09-May-2015 2:56 pm
புதுமை தமிழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 12:07 pm

@@@அவள் அப்படித்தான்@@@

என் அறிமுகத்தன்றே
பாவம் அவள்
மயங்கி விழுந்துவிட்டாள்,,
அதன் பின்
அவளுக்கு சுத்தமாய்
பிடிக்காத மருந்து
மாத்திரை
வாசனைகளை
வம்படியாய் திணித்தது
நானே தான்!!
மூக்கு பிடிக்க
ஒரு பிடிபிடிக்கும்
ஓரிரு பண்டங்களையும்
பார்த்தாலே
குமட்டச் செய்ததும்
என்னோட வேலை தான்!!
பட்டாம்பூச்சியாய்
சிறகடித்தவளுக்கு
அன்னநடை பழக்கிவிட்டேன்!!
இறக்க முடியா பாரத்தை
ஏற்றி ஏற்றி
மூச்சிரைக்க வைத்தேன்!!
அவ்வப்போது எனக்கு
போரடித்தால்
அவளை எட்டி உதைத்து
பந்தாடுவேன்!!
புரண்டு படுக்கவும் விடாமல்
படாத பாடு படுத்தி
எடுப்பேன்!!
இத்தனையும் பத்தாதென்று
பொய்யாய் வலி காட்டி
பயங்கர

மேலும்

புதுமை தமிழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2015 1:15 pm

அவள் ஒரு பேரழகி
ஆனால்,,,
அத்தனை திமிர் அவளுக்கு!!
கண்ணைப் புடநியில்
வைத்து வந்து
மோதியது அவள்!!
ஏதோ நான் மோதியது
போல் அப்படி முறைத்துவிட்டு
தெனாவட்டாய் கடந்துபோனவளை
திரும்பிப்பார்க்கவே தோணவில்லை!!
ஆனால் அவளே
சற்று நேரத்தில்
திரும்பிவந்தாள்
அதே பாதையில்,,
இப்போதும் அதே முறைப்பு,,
அருகிருந்த
பேருந்து நிறுத்தத்தில்
சென்று நின்றாள்,,
அங்கிருந்த துறுதுறு
பாப்பா அவளையே
குறு குறுவென
பார்த்தும்
கொஞ்சமும் சிரிக்காத
அவளைப் போலொரு
சிடுமூஞ்சுயை இதுவரைப்
பார்த்ததில்லை நான்,,
ஊமை மாணவன்
ஒருவன்
உதவிக்கரம்
நீட்டுமாறு
அச்சடித்த காகிதத்தை
கண்முன் நீட்டியும்
கையில் வாங்காமல்
கர்

மேலும்

படைப்பு சிறப்பு! 06-May-2015 8:04 am
சிறப்பு.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-May-2015 4:12 am
நல்லாயிருக்கு 04-May-2015 1:43 pm
அழகு 04-May-2015 1:32 pm
புதுமை தமிழினி - புதுமை தமிழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2015 4:44 pm

நேற்று வற்றவிட்டு
இன்று விற்றுவிட்டு
நாளை விக்கிக்கிடப்போமோ
துளி நீருக்காய்!!

மேலும்

அட ... படமும் , கவியும் அருமை . தொடருங்கள் .. 23-Mar-2015 9:39 pm
உண்மை 23-Mar-2015 5:29 pm
நன்றி சகோ 23-Mar-2015 4:50 pm
அட.. அசத்தல் 23-Mar-2015 4:50 pm
புதுமை தமிழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2015 4:44 pm

நேற்று வற்றவிட்டு
இன்று விற்றுவிட்டு
நாளை விக்கிக்கிடப்போமோ
துளி நீருக்காய்!!

மேலும்

அட ... படமும் , கவியும் அருமை . தொடருங்கள் .. 23-Mar-2015 9:39 pm
உண்மை 23-Mar-2015 5:29 pm
நன்றி சகோ 23-Mar-2015 4:50 pm
அட.. அசத்தல் 23-Mar-2015 4:50 pm
அர்த்தனன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Mar-2015 11:12 pm

கறுப்புச்சாயம்
தெளித்த‌
இராத்திரி பூச்சை
சிதைத்து நகர்ந்த‌
மின்கல விளக்குகள்!

கூதல் காற்றில்
வெடவெடுத்து!
தளும்பும்
நீர்க்கானத்தில்
மெல்லாடலை
அரங்கேற்றியிருந்தன...

ஈயக்குண்டுகள்
நங்கூரமிட்டிருக்கும்
தேசத்திலிருந்து
புறப்படும்
அவர்கள் வாழ்வின்
சொப்பன ராகம்!!
அலையோசையில்
மறைந்திருக்கலாம்!!

ஏலேலோ
ஐலசாவில்
மீன்கிளைகளோடு
சூரியனும்
இழுக்கப்பட்டிருக்கிறது!

எந்த தொழிலிலும்
கண்டிராத
அதிசயம்
நடக்கிறது!

மீனவன்
கைப்பற்றிய‌
மீனுக்கான
ஏலத்தில்!!
நுகர்வோன்
முதலாளியாய்...

அதோ
மற்றுமோர்
கட்டுமரத்தில்
போராடும்
மீனவனுக்கும்
இது தெரியும்!!

தேர்தலின்

மேலும்

அருமை அருமை 23-Apr-2015 4:36 pm
அருமை சகோ 23-Mar-2015 4:42 pm
அடித்து ...அடுத்த கவிதை படிக்க முடியாமல் எழதி சென்று விடுகிறீர்கள் .எந்த வரிகளை சொல்ல .... தொடருங்கள் 23-Mar-2015 9:57 am
அருமையான படைப்பு.வாழ்த்துக்கள் தோழரே 22-Mar-2015 11:22 pm
புதுமை தமிழினி - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2015 11:39 pm

கூடை நிறையப் பூக்கள்.
வருத்தத்துடன் மனைவி.

இரவுச் சாப்பாட்டுக்கு
என்ன செய்ய?

--கனா காண்பவன்

மேலும்

அருமை .. 23-Mar-2015 4:51 pm
புதுமை தமிழினி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Mar-2015 10:11 am

கோபமா?

எனக்கா??
சாதம் சற்றுக் குழைந்தாலும்
காட்டுக் கத்தலாய் கத்த நானென்ன அவரா!!

எனில் வெறுப்பா?

அடுக்களை பாத்திரங்களின்
நெளிவுகளிடம் நாசுக்காய்
கேட்டுப்பார்,,
என் வெறுப்பு எப்படி இருக்குமென
கதை கதையாய் கூறும் அவை!!

பின் வருத்தமா?

ம்ம்,,
காலை முற்றம் போட்ட பூக்கோலத்தின் மத்தியில்
வைத்த பூசணிப்பூ
மதியத்திற்குள் வாடிவிட்டதே,,
அதற்காய் வேண்டுமானால்
முகத்தை தூக்கிவைத்து கொண்டு
வருத்தப்படுவோமா
இருவரும் ஒருசேர!!

உண்மையை சொல்,,
வெறும் வயிறோடு வெளியில்
செல்லவிடாது வம்படியாய்
ஊட்டிவிட்ட கைகளை
தட்டிவிட்டுப்போனே
மூத்தவனின்
அலட்சியம்
ஆழமாய் உனை வதைக்கிறது தானே?

யா

மேலும்

வெகு சிறப்பு... கேள்வியும் பதிலும் கிளி கொஞ்சும் கவிபோல... நோய் எதிர்ப்புத் தடை செய்து சமுதாய நோய் ஏற்கும் கொடுமையை முடிவில் சொன்ன விதம் அருமை. வாழ்க வளமுடன் 05-Mar-2015 3:05 pm
நன்றிகள் தோழர்களே 05-Mar-2015 2:10 pm
மிக மிக அருமை தோழி . 04-Mar-2015 1:49 pm
அருமையான படைப்பு ..... வித்தியாசமான படைப்பு 04-Mar-2015 1:47 pm
ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) leninn மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2015 11:02 pm

~~~~விழிகளை சில முறை
மூடிக் கொண்டு அலைந்து விடு
~~~~மானிடா ~~~~!

~~~~ உனையே பின் தொடர்கிறது
உளவுத் துறை போல
~~~~இளமையெனும் _ஒரு
உல்லாசக் கப்பல்
~~~~லேசான தென்றல் கொண்டு
வாழ்வின் விளிம்பில் இருக்கும் -உன்
~~~~பாதச் சுவட்டினை ஆழ் கடலில் சாய்க்க
காத்துக் கிடக்குது -பருவம் எனும்
~~~~காற்றை திசை மாறி வீசி
உன்னை சாகடிக்க சபதம் கொண்டு திரிகிறது

ஆட்டுப் பிழுக்கையும்
~~~~ நெற்கதிரின் தாள் போல
வயிறு நிறைய வைக்கும் வாசனையாய்
~~~~தரித்திரம் பிடித்து நீ அலைவதற்கு
சரித்திரம் படைக்கும்
~~~~~சடலமாய் நீ உலாவும் வரை
காதலித்துக் கொண்டுதான் இருக்கும் -உன்
~~~~உயிரை காவி

மேலும்

வாழ்கையின் வாலிப வரிகள் தோழி 10-Apr-2015 11:58 pm
மிக மிக அருமை கீர்த்தனா . 03-Apr-2015 12:28 pm
//மடிதவழும் குழந்தையின் ~~~~மலமும் மார்கழிப் பூவாய் -மனதினில் சூடிக் கொள்ள ஆசைப்படுவாய் ~~~~வாகை சூடிய வீரர் போல உன்னை நினைத்து அழிந்து போகும் ~~~நேரங்களில் தான் மாற்றிக் கொள்வாய் -மனம் ~~~~எனும் சாக்கடையில் காதல் எனும் ஒரு கைக்குட்டை ~~~~கொச்சை நாற்றத்தோடு நாறிப்போகும் -உன் ~~~~கரம் பற்றி வலம் வரும் துணை உன்னை மறந்து -சுற்றிப் போவர் ~~~~இடது கரத்தில் தன் துணையை அழைத்துக் கொண்டும் ~~~~விரல் நுனியில் உன் மழலையையும் தாங்கிய வண்ணம் ...............// எவ்வளவு அருமையான விடயத்தை நேர்த்தியாக கூறி இருக்கிறாய் கீர்த்தனா. அருமை. 02-Apr-2015 10:07 pm
அருமை 19-Mar-2015 5:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (16)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (17)

kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
மேலே