படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்- போட்டிக்கவிதை-என் சுவாசக்காற்றே

இலையுதிர் காலச் சருகாய் இதயம்
உன் காலடி தேடித் தொலைந்தும்
நீ வந்து போன வழி
பார்த்தே காத்திருக்கிறேனடா நான்!!
கரை தாண்டிய கானலாய்
உன் மௌனம் உயிர் குடிக்க,,
வெடிக்கும் நாடி விழியில் வழிய
வலித்தாலும் காத்திருக்கிறேனடா!!
உன் காது திருகி
கொட்டிய நேசம் நெஞ்சை பிசைந்து
மெழுகாய் உருகி மருகுதடா!
உன் தோளில் நான் சாய்ந்து
நாம் இசைத்த வயலின் இசையை
தனிமை இம்சித்தே வதைக்கிறதே!
நீ தந்த கனவுகள்
என் மெல்லிசைகளை
முள்ளாகித் துளைத்தாலும்
மரத்துப்போன மனமோ
மீண்டுமோர் வசந்தத்துக்காய்
கண்பூக்க பூத்திருக்குதடா!!
காலம் முடியும் முன்
உனக்காய் மூச்சுவிடும் என்முன்
காற்றாகி வருட வாராயோ என் சுவாசக்காற்றே!!

எழுதியவர் : புதுமை தமிழினி (9-May-15, 1:37 pm)
பார்வை : 174

மேலே