அவள் ஒரு பேரழகி
அவள் ஒரு பேரழகி
ஆனால்,,,
அத்தனை திமிர் அவளுக்கு!!
கண்ணைப் புடநியில்
வைத்து வந்து
மோதியது அவள்!!
ஏதோ நான் மோதியது
போல் அப்படி முறைத்துவிட்டு
தெனாவட்டாய் கடந்துபோனவளை
திரும்பிப்பார்க்கவே தோணவில்லை!!
ஆனால் அவளே
சற்று நேரத்தில்
திரும்பிவந்தாள்
அதே பாதையில்,,
இப்போதும் அதே முறைப்பு,,
அருகிருந்த
பேருந்து நிறுத்தத்தில்
சென்று நின்றாள்,,
அங்கிருந்த துறுதுறு
பாப்பா அவளையே
குறு குறுவென
பார்த்தும்
கொஞ்சமும் சிரிக்காத
அவளைப் போலொரு
சிடுமூஞ்சுயை இதுவரைப்
பார்த்ததில்லை நான்,,
ஊமை மாணவன்
ஒருவன்
உதவிக்கரம்
நீட்டுமாறு
அச்சடித்த காகிதத்தை
கண்முன் நீட்டியும்
கையில் வாங்காமல்
கர்வமாய்
கைபேசி நோண்டிக்கொண்டிருந்த
அவள் கன்னக்குழி
கன்றாவியாய் தெரிந்தது!!
அந்த வழி வந்த முதியவர்
கால் தடுக்கி விழுந்ததும்
கைக்குழந்தை கூடப் பதறி
முழித்தும்
முறைத்துக்கொண்டே இருந்த
அவளை மட்டும்
ஆண்டவன்
மண்ணெடுத்து
படைக்காமல்
கல்லெடுத்து செய்துவிட்டான்
போலும்,,
இதற்கு மேல் அவளை
தூரமாய்
பார்க்கவும் சகிக்க முடியாது
கிளம்பையில் சரியாய்
வந்து நின்றது
ஆநாதைப் பள்ளியின்
வாகனம்
அவள் முன்!!
அப்போதும் அசைவற்று நின்றவள்
"பாம் பாம்"
என்று ஒலி எழுப்பியதும்
முன்னோக்கி நடந்து
அதில் ஏறிக்கொண்டாள்!!
உள்ளிருந்த பார்வையற்ற
பிள்ளைகளெல்லாம்
அவளின் தோள்களை
தொத்திக்கொள்ள,,
வண்டி மெல்ல நகன்றது,,
இப்போதும்
எனை முறைத்துக்கொண்டே
தான் போனாள்!!
ஆனால்,,
அவள் ஒரு பேரழகி!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
