நிதர்சனம் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
தேகம் மறந்ததோர் நல்லாடை
அகம் அணிந்தது திரைச்சேலை.
புகழை விரும்புபவன் கல்வியிருந்தும் மிருகம்
இகழ் உரைப்பவன் மனிதனில் மிருகம்
விதி எனும் ஏட்டின் தலைவன்
சதி நிறைந்த மாபெரும் எழுத்தாளன்
மதி பாரினிலில் ஒன்று தான் பேதத்தின்
கதி மானுடனை பல துண்டாக்கியது.
பெண்ணின் உயிர் மானம்
கண்ணின் மணியை கொடுத்து காத்திடுவாள்.
தண்ணிரில் தெரியாது நிழல்
கண்ணீரில் தெரியும் வறுமையின் உதிரம்.
அந்தி சாய்ந்தால் நிலா வரும்
பந்தி களைந்தால் சேரிச்சிறுமி வருவாள்.
காந்தி பிறந்த மண்ணில்
தந்திரமாய் பேசத்தெரிந்தவன் ஞானி
நாகரிகத்தின் ஓட்டம்
தகரம் செம்பொன்னானது
அகரம் சிகரமானது பறக்கும்
மகரந்தம் நஞ்சு விதையானது
உலகம் ஒரு அணு ஆயுதம்
கலகப் போராளிகள் நாம்
நலம் பெற கைகளை கோர்த்துக்கொள்
திலகம் பட்டம் பெறுபவரும் ஒழிந்திருப்பார்