தாய் மகன் பாசம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
கருவில் சுமந்த தெய்வமே......!
என் உதிரத்தில் உன் வாசம்.
வயிற்றில் ஈரத்துணியுடுத்தி
அமுதம் தந்தவளே.................!!!
ஓட்டைக் குடிசையிலுள்ளே
மாரி கால மழை முத்து
எனை தீண்டாமல் சேலையில்
அணைத்தவளே....................!!!!!
உண்ண பருக எதுவுமில்லை.
இருந்தும் சுமை தூக்கி
பாலூட்டினாயம்மா...............!!!
நீ கூலியாக இருந்தாலும்
எஜமான்கள் குழந்தை போல்
உடுக்க உடையும் கல்வியும்
தந்தாய்-அதை விட பன்மடங்கு
பாசத்தால் நேசித்தாய்........!!!!
நான் ஆசைப்பட்டு எட்டாக்
கனியாக இருந்தவை எவையுமில்லை.
உன் தலையை அடமானம் வைத்துக்கூட
கனவை நிஜமாக்கினாய் தாயே.....!!!!!!!
நான் உன் ஆசையென்ன கேட்க
மகனே! உன் முகத்தில் என்றும்
வாடாத சிரிப்போடு காணனும்
என்றுரைத்தாய்.....................!!!!!!
அம்மா என் மண் நிலவே!
உன் மடியில் என் இறுதி
மூச்சு , மகன் புண்பட்ட
நெஞ்சோடு கேட்கிறான்.
சம்மதம் தருவாயோ....?