விதைக்குள் மூழ்கிய விருட்ச்சம்

பிஞ்சாய் போய் வீழ்ந்தோம்
அக் கற்றல் கூடாரமதில்...

ஈன்றவரிடமிருந்து எம்மை கடத்திய வைத்திய சாலை அது.
அறியாமை நோய் விலகிடவே அங்கு விடப்பட்டோம்..

விசும்பினேன்...

விசும்பலின் ஏக்கம் தந்தை அறிந்திருக்க மாட்டார்...
புது பிரதேச பயம் என்றே தம்மை தேற்றி கொள்வார்....

அவ்விசும்பல் சொன்னதோ வேறொன்று

அறிவு முடமாய் போக, உருதரித்த இடமது..
பாலக வயது உணர்ந்தே விசும்பியிருந்தது...
தந்தை அறிந்திருக்கவில்லை...

வாழ்வின் பாதியை தொலைத்தேன் அக்கொடூரக் கோவிலில்

கற்றோர் யாவரும்
அடை மழை அறிவில் திமிர
ஆன்றோர் வகுத்த குடில்..
அறிவோ அடை மழை அல்ல,
சொட்டு நீருக்கே பாக்கியமின்றி அரைபிடி சிரசில் முடிவுற்றது

அது புது வானமியற்ற வில்லே

புது கோஷங்களை
உளமுறத்தில் போட்டு புடைக்கவில்லே

புண்ணின் மேல் மொய்த்த கரு வண்டாய்,
புத்தியின் வவுற்றில் செறியாச் சோறாய்ப் போய் படிந்தது

ஆம் நடைமுறை கல்வியை அவ்வாறே உரைப்பேன்...
காட்சியற்றவன் கண்ணெதிர்,
சீரிய நடனம் அதன் போக்கு...
நான் புரிந்து கொள்ள மறுத்தேனோ?

இல்லை.
அது தன் புலமையில் தோற்றது..
எம் புன்சிரிப்பை போர்த்தியது..
கானத்து குயிலின் குரல்வளை நெரித்தது...

இக்கவியின் வழியே கசிகிறேன்
எம் கற்றல் தோற்றது....

-சங்கர்சிவக்குமார்

எழுதியவர் : சிவசங்கர்.சி (28-Mar-15, 8:54 pm)
பார்வை : 83

மேலே