பயன்படுத்தாதே பயன்படுத்தாதே

வீரத்தை
அடிமைபடுத்த பயன்படுத்தாதே!!

பாசத்தை
பணத்திற்காக பயன்படுத்தாதே!!

அன்பை
சுயநலமாக பயன்படுத்தாதே!!

உழைப்பை
குறுக்குவழியில் பயன்படுத்தாதே!!

காதலை
காமத்திற்காக பயன்படுத்தாதே!!

அதிகாரத்தை
உனக்கு சாதகமாக பயன்படுத்தாதே!!

பொறுமையை
வீணாக பயன்படுத்தாதே!!

பணத்தை
வீண் விளம்பரத்திற்காக பயன்படுத்தாதே!!

பண்பை
பிறரை ஈர்க்க பயன்படுத்தாதே!!

உதவியை
எதிர்பார்ப்புடன் பயன்படுத்தாதே!!

சுதந்திரத்தை
தவறாக பயன்படுத்தாதே!!

முக்கியமாக
உன்னை
உனக்காக மட்டும் பயன்படுத்தாதே!!

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (30-Mar-15, 2:33 pm)
பார்வை : 61

மேலே