நாட்களாச்சு

நாட்களாச்சு...
மழை பூமியை பார்த்து
பசுமையை உயிர்கள் பார்த்து
பறவைகள் மரங்களை பார்த்து
பறவைகளை மனிதன் பார்த்து
குளம், கிணறு, ஆறு நீரைப்பார்த்து
நீர் மீனைப்பார்த்து
மீன் கொக்கைப்பார்த்து
கொக்கை குழந்தைப்பார்த்து
நீ என்னைப்பார்த்து
நான் உன் கண்ணைப்பார்த்து
ஒரு கையில் பத்து விரல் பார்த்து
என்னை நானே பார்த்து
யாரும் யாரிடமும்
எப்போதும் எந்நாளும்
குறை சொல்வதில்லை
நான் மட்டும் சொல்வேனோ!!!
இன்றுவரை உன் நினைவாகவே
இருக்கும்
கருப்பன்