அவர்வழி தொடர் வோம்

அவர்வழி தொடர் வோம்....!
இரக்கமிகு சிந்தனையால் தம்முயிர்
இருக்கும் வரைஇரத்தம் தருவோர்...
இறந்தும் இருவிழிகள் தந்துஇவ்
உடலினையும் தானம் செய்வோர்...
உயிருலவ உடலியங்கா துயர்
மூளைச் சாவால் உள்உறுப்பை...
உயிர்ப் போடுகொடை யளிக்கும்
குடுபங்களைக் கோயில் களாய்...
கும்பிட்டு வழிபடு வோம்..! - இனி
அவர்வழி தொடர் வோம்....!