காத்திருப்பதில்லை வாழ்க்கை

காத்திருப்பதில்லை வாழ்க்கை ~ ஆதர்ஷ்ஜி
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»

ஒப்பிடா வாழ்வே
ஒப்பிலா வாழ்வென்பதை
உணர்வதேயில்லை நீ...!

எடுப்பார் கைப்பிள்ளையாய்
பிறர் கூறும் வார்த்தைகளில்
நம் வாழ்வை தொலைத்து நிற்கிறாய் மற்றொரு முறை.

யார் யாரோ எறிகின்ற தீப்பந்தங்களை
தீபங்கள் என்றெண்ணி செருகிக் கொள்கிறாய்
நம் வீட்டுக் கூரையின் மேல்....

பின்பு
பற்றி எரியும் கூரையைக் கண்டு பதறுகிறாய்.... கதறுகிறாய்....

எரியும் தணலை அணைத்திட,
உன் கண்ணீர் போதாது...
என் உதிரத்தையும் கலந்து கொள்....

விரைவில் தீயணைத்து முடித்து
வீசியெறிந்து செல்வோம் வா ...

கடக்கும் தூரமும் சுமக்கும் பாரமும் மலைக்க வைத்திட
கைகோர்த்துச் செல்லக் காத்திருக்கிறேன்... நான்...
கடந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (3-Apr-15, 8:58 pm)
பார்வை : 350

மேலே