குறையோடு என்னை ஏன் படைத்தாயோ

கால்கள் இல்லாத போதும்
கழி கொண்டு தானே அவர் நடக்க முயல
ஓடி சென்று உதவ மனம் எண்ணம் கொள்ளும்
விரைந்து நானும் சென்று அவரை தாங்கி பிடித்தால்
என் கைகள் விலக்கி தத்தி தத்தி அவரே செல்வார்

கண் பார்வை அற்றவராக
என் பார்வை முன் ஒருவர் நடந்து செல்ல
படைத்த உனக்கு கண் இல்லையா
என உன்னை நானே திட்டி விடுவேன்
தெருவை அவரும் கடக்க முயல்வதை கண்டு
உதவிட செல்வேன்... மீண்டும் என் உதவி மறுக்க பட காண்பேன்

கைகள் அற்றவரும் உடலில் உறுப்பு இழந்தவரும் என
நூறு பேர்களை காணும் பொழுதினில்
உதவிட முடியாது விலகி நிற்கிறேன்
என் உதவி அவர்கட்கு பிச்சை போல் தெரிவதால்

இத்தனை தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களை
மண்ணில் நீயும் படைத்தது விட்டாயே
என் மீதும் மட்டும் ஏன் கோபம் உனக்கு
சிறு தோல்வியில் கூட துவண்டு போகும்
தன்னம்பிக்கையற்றவனாக,
குறையோடு என்னை ஏன் படைத்தாயோ ...???

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (4-Apr-15, 10:57 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 80

மேலே