புரிதல்
புரிதல்
நிச்சயம் என்று தெரிந்தாலும்
நிதானமாய் நாலும் பகிர்ந்திடு
நின்று நிலைத்திட கொஞ்சம்
மெனக்கிடு
அக்கம் பக்கம் செவி சாய்த்திடு
ஆதரவாய் நாளும் பேசி
மகிழ்ந்திரு
கண்ணில் மின்னல் காட்டிடு -அது
கனவில்லை நிஜம் என
மெய்பித்திடு
உன்னால் முடியும் என
உயர்ந்திடு -இந்த
உலகில் உனை வெல்ல
யார் உண்டு
உழைத்திடு !!
சிவ. ஜெயஸ்ரீ