கல்விப் பயணம் -1
கல்விப் பயணம் -1
பள்ளி செல்லும்
முதல் நாள்
புத்தாடை
புத்துணர்ச்சி
புது அனுபவம்
இரண்டாம் நாள்
அம்மாவை பிரியும் ஏக்கம்
விளையாட்டை துறக்கும் சோகம்
மூன்றாம் நாள்
அழுது அடம் பிடித்து
விடுப்பு இதுவே
தொடர் கதை முதல் ஓராண்டு
பள்ளி செல்வது கட்டாயம்
கால மாற்றம்
நண்பர்கள் கூட்டம்
உனை மாற்றும்
பள்ளி ஓர் அங்கம்
பசுமை கலந்த நினைவுகள்
பாடம் அதில் இரண்டாம் நிலை
பள்ளி தோழர்களுக்கே முன்னுரிமை
அப்படி இப்படி என கல்லூரியிலும்
நுழைந்திடுவாய்
சொர்கமா நரகமா என
கேள்விக்கு பதில் தேட
முனைந்திடுவாய்
கல்லூரி முடித்து பணியில்
திணறிடுவாய்
பாஸின் அதட்டலை போக்க
அப்டேட் செய்திடுவாய்
கல்விப் பயணம் -அது
முடிவில்லா தொடர் கதை
கல்வியை காதலிப்போருக்கு
என்றும் இல்லை
கீழ் நோக்கு நிலை
சிவ. ஜெயஸ்ரீ