தயக்கம்

கனவுக்கு இரவுவரத்
தயக்கம்
துயில் இல்லை

நிலவுக்கு வானில்வரத்
தயக்கம்
இரவு இல்லை

தென்றலுக்கு தோட்டம்வரத்
தயக்கம்
பூக்கள் இல்லை

பொய்களுக்கு இத்ழ்வரத்
தயக்கம்
சத்தியம் வாழ்கிற்து

காதலுக்கு இதயம்வரத்
தயக்கம்
பொய் வாழ்கிற்து

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-15, 7:48 am)
Tanglish : thayakkam
பார்வை : 206

மேலே