மயக்கம்

மதுவில் மயங்குது வண்டுகள்
மலர்கள் மகிழ்ச்சியில் சிரிக்கின்றன
ம்துவில் மயங்குகிறான் மனிதன்
குடும்பங்கள் கண்ணீரில் அழுகின்ற‌ன

மாலை மயங்குது வானில்
ஒவியம் எழுதுது கைகள்
மனது மயங்குது மாலையில்
கனவு எழுதுது கவிதைகள்

மயக்கங்கள் மண்ணில்
எத்தனை எத்தனையடா ?
மயங்கி விட்டால் அதில்
உய்ர்வு தாழ்வு ஏதடா ?

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-15, 8:48 am)
Tanglish : mayakkam
பார்வை : 72

மேலே