பசி

பசிக்க மறந்து விட்டது வயிற்றுக்கு
அவளும் ஊட்டவில்லை
இதுநாள் வரை
நீ பசி தாங்க மாட்ட சாப்பிடு
என ஊட்டியவள்
இன்று
ஏனோ
மனம் மரத்துபோய்விட்டதா
பாசம் குறைந்து விட்டதா

புகுந்த வீடு செல்ல வேண்டியவள் நீ
வேண்டுமென்றால் எடுத்து சாப்பிடு என்கின்றாய்

ஏனோ மனது அழுகிறது
இன்னொருவன் மனைவி நீ
என அறிவுரை கூறி உறவுகள் தூரம் காணும்போது

நீயும் என்னை வெறுக்காதே அம்மா

எழுதியவர் : ஷாமினி குமார் (5-Apr-15, 10:14 pm)
Tanglish : pasi
பார்வை : 84

மேலே