விவசாயம் - இன்று வெறும் சாயம்
'உன் நெற்றிச் சுறுக்கங்களில்
உன் வற்றிப்போன பூமி தெரிந்தது.
உன் வியர்வைக் குடித்தும்
உன் குடிசையின் தாகம் தீர்ந்தப்பாடில்லை.
உன் பசுவைக்கூட
பட்டினிப்போட மனமின்றி
உன் துணையின் சேலை விற்று வைக்கோல் வாங்கி வந்தாய்.
உன் மனதில் தான் எத்துணை ஈரம்
உன் மண்ணில் ஏனோ இல்லை ஈரம்.
அரிசி குவியல் மீது ஆடிய உன் குழந்தைகள்.
இன்று ஓர் கைப்பிடி
அரிசிச்சாதம் திண்பதற்க்கு
வரிசையில் நிற்பதா?
அய்யோ! இதைக் கண்டு
என் நெஞ்சு பொறுக்குதில்லையே!!
(உலகுக்கே உணவூட்டிய
உன்னதமான எல்லா விவசாயிகளுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்).