கடவுளின் விலை என்ன

கோவிலுக்குள் நுழைந்தேன் நான்
மனம் முழுக்க நம்பிக்கையுடன்
ஆதி தமிழன் வடித்த சிற்பங்கள்
வாயில்கள் முதல் கண்களை கவர
என் எண்ணத்தை கவர்ந்தது அறிவிப்பு பலகைகள்
10 ரூபாய் தரிசனம் செல்லும் வழி
50 ரூபாய் தரிசனம் செல்லும் வழி
100 ரூபாய்…. அப்பப்பா
போதுமடா சாமி,
எத்தனை வழிகள் உன்னை பார்ப்பதற்கு
வித விதமாய் யோசித்து
கோவிலை கடை வீதி போல் ஆக்கிய மனிதனே
ஏழைகள் பணம் படைத்தவர்கள் எனும் பேதத்தை
கோவிலிலும் கொண்டு வந்து விட்டீரே
ஒற்றை கேள்வி கேட்கிறேன் உன்னிடம்
நீ சிறைப்பிடித்து வைத்திருக்கும்
அந்த கடவுளின் விலை என்ன????

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (5-Apr-15, 9:20 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 181

மேலே