உலகாயுதம்-ரகு

நொடிகளில்
சுழன்று விடுகிறது
வாள் வார்த்தைகள்

தீட்டவுமில்லை
பாதுகாப்புக்கெனப்
பத்திரப்படுத்தவுமில்லை

ஆயினும்
எவரையும் எளிதாகக்
கிழித்துவிடும்
வல்லமை அதற்கு

சிலநேரத்
தனிமைக்குப் பிறகே
உணர முடிகிறது
வாள் பட்டவர்களின்
வலியை

எப்பொழுதேனும்
நம்மையும்
தீண்டி விடுகிறது
அல்லவா அவ்வாள்!

வசைச் சொற்களின்
கூட்டம் ஒரு
வன்முறைக் கும்பல்
கோபமே அதற்குத்
தலைவன்

மனிதர்காள் கேளுங்கள்
உலகாயுதம்
உமாதான சொல்

எதற்கு
உபயோகப் படுத்துவதாக
உத்தேசம்

அழிவு ? அரண் ?

எழுதியவர் : சுஜய் ரகு (9-Apr-15, 7:44 pm)
பார்வை : 241

மேலே