வெள்ளிக்கிழமை
எல்லா நாளும் அஞ்சு மணிக்கு அடிக்கும்
அம்மாவின் அலாரம், வெள்ளிக்கிழமைக்கு மட்டும்
நாலு மணிக்கே அடிச்சி நிற்கும்.. !!
புடவையை கொஞ்சம், இழுத்து சொருகி
கையிலே ஈச்சமாரை , அம்மா எடுத்தாக்கா
வீடே வெள்ளிபாத்திரமா மினுமினுக்கும்..!
அவங்க வளைச்சி போடும் கோலத்துல,
வானவில்லும் மலச்சி போகும்.. !
ஏத்தி வச்ச குத்து விளக்கு வெளிச்சத்துல
வைரம் கூட பொய்த்து போகும். .!
பொருத்தி வச்ச ஊதுப்பத்தி வாசத்துல
சொர்க்கம் கூட சொக்கி போகும்.. !!
நெத்தியில போட்ட பட்டை,
வேர்வைல நாமம் ஆகும்.. !
பத்தியோடு சூடத்தை, சாமிக்கு அம்மா காட்டி வைக்க,
எல்லோரும் சாமிப்பக்கம் பாத்து நிக்க,
நான் மட்டும் அம்மாவே வணங்கி நிப்பேன்.. !!!