உன் நினைவுகள்

இமைகள் இரண்டும் மூடாமலே
கனவு காண கற்றுக் கொடுத்தாய்...
தோன்றிய கனவுகள் முடியும் முன்னரே
கண்களை பறித்து கொண்டாய்...
பெண்ணே, உன் இதயம் என்னும் சிறைச்சாலையில்
ஆயுள்கைதியானேன்...
விடுதலை ஆக மனமில்லாமல் தினம் தினம்
உணர்வோடு போராடும் பயணம் இது...
இந்த பயணம் முடியும் நேரம் இடம் வேண்டும்
பெண்ணே உன் மடியின் ஓரம்..
எனக்காக உன் கண்கள் கசியும் நேரம் உயிர்த்தெழுவேன்
உன் கண்ணீரை தாங்க மட்டும்...
மறுஜென்மம் சாத்தியமே இந்த காதலில் மட்டும்....
உயிருடன் இருப்பதாய் உணர்கிறேன்
உன் நினைவுகளோடு உறவாடும் போது மட்டும்.

எழுதியவர் : riyasdeen (11-Apr-15, 9:42 am)
Tanglish : un ninaivukal
பார்வை : 154

மேலே