வலிகள் - சகி

வலிகள் ....

நீ கொடுத்துச்சென்ற
காதல்காயங்களில்
என் மனம் படும்
துன்பங்களின் அளவை
நீ அறிவாயா ?

உன்னை ரசித்த
என் விழிகள் கலங்குவதை
நீ அறிவாயா ?

மெளனமாக எனக்குள்ளே
என் மனம் அழுவதை
நீ அறிவாயா ?

அன்று...

நீ எளிதாக
விலகிவிட்டாய் ...

இன்று ....

உன் நினைவில்
நான் மெல்ல மெல்ல
கரைந்துக்கொண்டிருக்கிறேன் ...

தீயில் எரியும்
சருகாய் ....

என் மரணம் வரை
நீ கொடுத்த வலிகள்
போதும் ....

என் காதலுக்கு
நீ கொடுத்த
காதல் பரிசாய் ....

எழுதியவர் : சகி (11-Apr-15, 4:15 pm)
பார்வை : 613

மேலே