யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

சாலையில் அனாதையாய்
கைவிடப்பட்ட பாறாங்கல்
சிற்பி கைபட்டால் கடவுள்
சிலையாய் மாறிடலாம்.

டீக்கடையில் எண்ணெய் பட்ட
வெள்ளைக்காகிதம் ஓவியன்
விரல்பட்டால் மோனாலிசா ஆகிடலாம்.

அழகான பூங்கோதை
கட்டழகு கருவிழிகள்
காதலன் கண்ணில் பட்டால்
பனையோலையில் கண்ணீர்
பட்டும் கரையாத கவிதையாய்
மலர்ந்திடலாம்.

யானைகள் வாழிடத்தில்
எறும்புகள் வாழ்வதும்,
பூனையிருக்கும் வீட்டில்
எலி உலா வருவதும் போல
மனிதனாய் பிறந்து போராடத்
தயங்கி உன் கண்கள்
மூடியிருந்தால் ஜடமென்று
சங்கு ஊதி விடுவார்கள்.

கவிக்குறிப்பு:09/04/2015ம் உதய சூரியன் வார பத்திரிகையில் வெளிவந்த எனது கவிதை

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (12-Apr-15, 11:08 am)
Tanglish : yadhaarththm
பார்வை : 374

சிறந்த கவிதைகள்

மேலே