மாநகரம்

மாநகரம்
கனவுகளுடனே தூங்க செல்வதும்
கற்பனை உலகில் ஏங்கி தவிப்பதும்
கட்டாய விடுப்பை எதிர்பார்த்தே நிற்பதும்
கல்யாண நாளை மறந்தே போவதும்

ஓட்டமும் நடையாய் ஓடி திரிவதும்
ஓடும் பேருந்தில் தாவி செல்வதும்
ஒன்றும் திண்ணாமல் டையட்டில் கிடப்பதும்
ஒட்டிய வயிறால் பெருமிதம் கொள்வதும்

சக்கரம் போன்றே சுழன்றே ஆடுவதும்
சாகசம் செய்து புதுமை காண்பதும்
சட்டு சட்டென்று ஆடைகள் வாங்குவதும்
சடங்குக்காய் சில பண்டிகை செய்வதும்

மகிழ்ச்சியை தேடி எங்கோ அலைவதும்
மன நிறைவே இல்லா வாழ்வில் உழன்று தவிப்பதும்
மாடி வீடு நட்சத்திர உணவகம்
மாத முடிவில் கட்டு கட்கட்டாய் காகித பொட்டலம்

விழித்த உடனே பறக்க வேண்டும்
விழி பிதுங்க நாளும் உழைக்க வேண்டும்
விருப்பம் எல்லாம் துறக்க வேண்டும்
விண்ணை தொடும் இலட்சியம் கூட புதைக்க வேண்டும்

சிவ.ஜெயஸ்ரீ

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (12-Apr-15, 10:07 am)
பார்வை : 124

மேலே