ஆத்மா

விடாது வினைகள்!
அடாது மனது!
தொடாது புண்ணியம்!
படாது மகிழ்ச்சி!
வராது நிம்மதி!
சேராது செல்வம்!
போகாது பாவங்கள்!
துரத்தியே வந்த
துன்பங்கள்!
நீ சேர்த்து வைத்த
சொத்துகள்!
நிழலாய் தொடரும்
நிஜங்கள்!
எல்லாம் உன் உள்ளம்!
எங்கும் அதன் பிம்பம்!
என்றும் உன்னைத் தொடரும்
யாருமல்ல
உன் ஆத்மா!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (15-Apr-15, 7:15 pm)
Tanglish : athmaa
பார்வை : 113

மேலே