ஊடல்களின் உமிழ்தல்கள் 1
எங்கே இருக்கிறது இப்போது
நமக்குள் நேசம்
எங்கே போனது
நமக்குள்ளிருந்த காதல்
தம்பதிகளா நாம்
தனித்தீவா நாம்
குழப்பத்தில் நான்
சத்தியமாய் சொல்வேன்
சம்சாரபந்தம் இவள்ளவு
சல்லிதனமானது என
முன்பே தெரிந்திருந்தால்
சாமியாராகியிருப்பேன் என்று!
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
என்று சொல்வதுண்டு
கணவன் அமைவதெல்லாம்
இறைவன் கொடுக்கும் சாபமா?
நானுக்கு எப்படியோ
சத்தியமாய் சொல்வேன்
நீயெனக்கு சாபம் மட்டுமே!
பூவை போல
மெல்லியது தான்
என் இதயமும்
சம்மட்டியாய் நீ
அடிக்கும் வார்த்தைகளின்
அழுத்தம் தாங்காமல்
வாடிப்போவதே அதன்
வாடிக்கை ஆனதே
தற்கொலை எண்ணங்களையும்
தர வல்லதுதான் உன்
கூரிய வார்த்தைகளின் வீரியமும்
கூறாத மவுன அலட்சியமும்
என தெரியுமா உனக்கு
என தலைவா!
உணர்ச்சிகளை எல்லாம்
உள்ளுக்குள் உமிழ்ந்தபடி
ஊர்கிறது என் நாட்கள் ....

