யாழினி வ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : யாழினி வ |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : 13-Aug-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 300 |
புள்ளி | : 53 |
என் காகிதங்களுக்குளும் என் கற்பனைகளுக்குளும் சிறைபட்டு கிடக்கும் என் குட்டி கவிதைகளுக்கு கொஞ்சம் விடுதலை அளிக்க இந்த வலைத்தளத்தில் நான் ......
...............
கவி நட்புகளோடு கவிதைகள் ரசித்து படித்து, கவிதைகள் எழுதி, வளர்ந்து என்றாவது ஒரு நாள் ஒரு குட்டி கவிதை நூல் வெளியிடும் பேராசையோடு நான்....
ஒரு பக்குவமான வயதை எட்டிய நாளிலிருந்து எனக்கொரு குட்டி தேவதையைப் பற்றிய கனவு ஓன்று அவ்வப்போது வருவதுண்டு. எங்காவது என் வழியில் விழி உருட்டி குட்டி கம்மலை ஆட்டி குட்டி கொண்டை சரிய வெண் முத்துப்பல் காட்டி சிரிக்கும் பெண் குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கான என் தேவதை என் நினைவில் வந்து போவதுண்டு.
பெண் குழந்தை மேல் மட்டுமான ஆசையில்லை அது. எனக்கான என் தேவதை ஒருநாள் என் வாழ்வில் வருவாள். அவள் என்னை போலவோ என்னவன் போலவோ இருக்கு வேண்டும் என ஏனோ நினைத்ததில்லை.
என் தேவதை என் அம்மாவைப் போலிருக்க வேண்டும் என பேராசை கொண்டிருந்தேன். சாந்தமே உருவான என் அம்மா வடிவில்
ஒரு பக்குவமான வயதை எட்டிய நாளிலிருந்து எனக்கொரு குட்டி தேவதையைப் பற்றிய கனவு ஓன்று அவ்வப்போது வருவதுண்டு. எங்காவது என் வழியில் விழி உருட்டி குட்டி கம்மலை ஆட்டி குட்டி கொண்டை சரிய வெண் முத்துப்பல் காட்டி சிரிக்கும் பெண் குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கான என் தேவதை என் நினைவில் வந்து போவதுண்டு.
பெண் குழந்தை மேல் மட்டுமான ஆசையில்லை அது. எனக்கான என் தேவதை ஒருநாள் என் வாழ்வில் வருவாள். அவள் என்னை போலவோ என்னவன் போலவோ இருக்கு வேண்டும் என ஏனோ நினைத்ததில்லை.
என் தேவதை என் அம்மாவைப் போலிருக்க வேண்டும் என பேராசை கொண்டிருந்தேன். சாந்தமே உருவான என் அம்மா வடிவில்
இன்னொரு அப்பாவாகவும்
இனியதொரு தோழனாகவும்
இயல்பான தியாககாரனாகவும்
என்னோடு பயணித்த நீ !
அப்பாவின் காலத்துக்குபின்
இன்னும் அதிகமாக
அப்பாவின் இடத்தை
நிரப்பிக் கொண்டும்
என்னோடு பயணிக்கும் நீ!
என் தந்தையுமானவன்
என் அண்ணன் நீ!
அன்றொரு நாள்
அந்த சின்ன வயதில்
அருமை அன்னையின்
இதய துடிப்பை
கேட்டு அதியசித்தேன்
அறியா பிள்ளையாய்
என்னை பார்த்து புன்னைகைத்து
என் நெஞ்சில் கைவைத்து
அவள் பார்க்க சொல்லியதை
நம்பாமல் நான் வைக்க
நிஜமாகவே கேட்ட சத்தத்திற்கு
நான் ஆர்ப்பரித்து துள்ளினேன்
மழலை செல்லமாய்
பின்னொரு நாளில்
பிறைநிலா ஒளியில்
மாலை பொழுதில்
மன்னவன் மார்பில்
சாய்ந்தபோது அதுபோலவே
சத்தம்கேட்டு எனக்குள்
சிரித்து கொண்டேன்
வெட்கிய மாதுவாய்
இதுவரை நெஞ்சில்
கைவைத்து கேட்டுரசித்த
இதயத்துடிப்பின் இசை
இன்று வயிற்றில்
கேட்கிறதே மீண்டும்
பிரமித்து நிற்கிறேன்
மழலையை போல
இன்று ந
அன்றொரு நாள்
அந்த சின்ன வயதில்
அருமை அன்னையின்
இதய துடிப்பை
கேட்டு அதியசித்தேன்
அறியா பிள்ளையாய்
என்னை பார்த்து புன்னைகைத்து
என் நெஞ்சில் கைவைத்து
அவள் பார்க்க சொல்லியதை
நம்பாமல் நான் வைக்க
நிஜமாகவே கேட்ட சத்தத்திற்கு
நான் ஆர்ப்பரித்து துள்ளினேன்
மழலை செல்லமாய்
பின்னொரு நாளில்
பிறைநிலா ஒளியில்
மாலை பொழுதில்
மன்னவன் மார்பில்
சாய்ந்தபோது அதுபோலவே
சத்தம்கேட்டு எனக்குள்
சிரித்து கொண்டேன்
வெட்கிய மாதுவாய்
இதுவரை நெஞ்சில்
கைவைத்து கேட்டுரசித்த
இதயத்துடிப்பின் இசை
இன்று வயிற்றில்
கேட்கிறதே மீண்டும்
பிரமித்து நிற்கிறேன்
மழலையை போல
இன்று ந
நிலவை
பங்கு போட்டது
ஜன்னல் கம்பி......
கொஞ்சம்
கொஞ்சமாய்....
கவிதை ரசம் வைக்க
பயன்படுத்திக் கொண்டேன்
வெள்ளைப் பூண்டு......!
பச்சை பசேல் என்றிருந்த புல்வெளிகள்
மஞ்சள் கோடுகளால் பிரிக்கப்பட்டு
மனைகளாய் மாறிவிட்டன
தாவணிப் பெண்கள்
உச்சி வெயிலில் கூட
நைட்டியில் திரிகிறார்கள்
ஊர் பஞ்சாயத்தெல்லாம்
இப்பொழுது
டாட்டா சுமோ தாதாக்களின்
தலைமையில்தான்
நடைபெறுகிறது
ஆலயங்களில் விளக்கேற்றிய
அய்யர்களெல்லாம்
அமெரிக்காப் போய்விட்டார்கள்
குடிசைகளெல்லாம்
மாடிகளாய் மாறிவிட்டன
டீ கடைகளைவிட
மருந்து கடைகள்
அதிகமாகிவிட்டது
பத்தாண்டுகளில்
எனது கிராமத்தின்
வளர்ச்சி வியக்க வைக்கிறது
ஆனாலும்
இதயம் ஏனோ வலிக்கிறது
ஆத்திரம் தாளாமல்
அவள் அடித்தாலும்
ஆறாமல் அழக்கூட
அம்மா மடியையே
தேடும் மழலையின்
அன்பை என்னவென்று
சொல்வேன்
கடலையே தேடித்தேடி
திரும்பும் அலைபோல
தாய்மடி சேரும்
தங்கம் நீ
விடிகாலை வெளிச்சத்தில்
தூங்கும் உன் முகத்தில்
நிசப்தமாய் இருக்கும்
கடலின் ஆழங்களின்
அழகு!
கண்விழித்து சோம்பல் முறித்து
என்னை பார்க்கும்போது
கடலலை நடுவே கண்ட
கதிரவனின் ஒளிக்கீற்றின்
அழகு உன்னில்!
உன் ஓயாத
துருதுரு பேச்சில்
ஓய்வென்பதை அறியாத
அலைகளின் ஆர்ப்பாட்டம்
அயர்வற்று அடங்காத
உன் விளையாட்டுக்களில்
கடலில் களைப்பற்று
துள்ளிக்குதிக்கும் மீன்களின்
அழகு
உதடுதிறந
என் முதல் காதல் இல்லை என் முதல் ஈர்ப்பு எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை . ஆனால் அது தான் என் மனதில் அடித்த முதல் அலை.
அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் . பட்டாம்பூச்சியாய் பள்ளி செல்வது அப்புறம் சாயுங்காலம் ஆனால் வந்து அம்மாவின் கூட்டில் பிள்ளைபூச்சியாய் மாறி செல்லம் கொஞ்சும் அம்மா பிள்ளையாக தான் இருந்தேன் நான்.
என்றும் போல பள்ளியிலிருந்து சரியாக நாலரைக்கு வீடு திரும்பிய நான் வழக்கம் போல நாள் முழுதும் நடந்த கதைகளை வாய் மூடாமல் சொல்ல ஆரம்பித்தேன் அம்மாவிடம் இடையிடையே அம்மா தந்த டீயை சுவைத்தபடி. எங்கள் கதைகள் முடிந்தத
என் கவிதைகளில்
சிறந்தது எதுவென
தோழிகளை கேட்டு
தொந்தரவு செய்ததுண்டு
கல்லூரி காலங்களில்
கல்யாணத்திற்கு பிறகு
என் கேள்வி
இடம் மாறியது
என் கணவிரிடம்
இப்போது யாரிடமும்
கேட்பதே இல்லை
என் கேள்வியின்
பதிலாய் நீ
எனக்குள் வந்தாய் !
நான் காகிதங்களில்
எழுதி கிறுக்கிய
அத்தனை கவிதைகளின்
அழகையும் ஓரம்
தள்ளி விட்டு
அழகாய் வந்து
அமர்ந்தாய் நீ
என் கருவில்
ஒரு குட்டி
கவிதையை போல !
உன் கருவிழியில்
விழி அசைவினில்
கன்னகுழி அழகில்
வாய்வழி தேனில்
கூந்தல் கீற்றில்
விரல் வீணையில்
மழலை மொழியில்
தோற்று போனது
என் கற்பனை
கவிதைகள் !!!
அது ஒரு
மழைக்கால சாயங்காலம்
நான்கு மணி
பள்ளிவிட்டதும் பையோடு
பட்டாம்பூச்சிகளாய்
பறக்க துடித்த எங்களை
நிறுத்தி வைத்தது
சட்டென்று பெய்த
பெரு மழை!
வகுப்பறை ஓரமாய்
நின்றபடி நாங்கள்
கொஞ்ச நேரம்
காகிதங்களை கப்பலாக்கினோம்
கொஞ்ச நேரம்
கதைகள் பேசினோம்
கொஞ்சம் விரல்கள்
நீட்டினோம் மழைச்சாரலில்
கொஞ்சம் மழை
தணிய காத்திருந்தபடி
சல்லென்று பெய்த
மழை இப்போது
சில்லென்று சாரலாய்
மாறி இருந்தது
இனி போகலாம்
என்று பொறுமையிழந்து
என்னிடம் சொன்னது
என் பக்கத்துவீட்டு தோழியும்
என் அம்மாவைத்த குடையும்
மெல்ல நடக்க
ஆரம்பித்தோம் நாங்கள்
கொஞ்சம் குடைக்குள்ள