எனது கிராமம்

பச்சை பசேல் என்றிருந்த புல்வெளிகள்
மஞ்சள் கோடுகளால் பிரிக்கப்பட்டு
மனைகளாய் மாறிவிட்டன

தாவணிப் பெண்கள்
உச்சி வெயிலில் கூட
நைட்டியில் திரிகிறார்கள்

ஊர் பஞ்சாயத்தெல்லாம்
இப்பொழுது
டாட்டா சுமோ தாதாக்களின்
தலைமையில்தான்
நடைபெறுகிறது

ஆலயங்களில் விளக்கேற்றிய
அய்யர்களெல்லாம்
அமெரிக்காப் போய்விட்டார்கள்

குடிசைகளெல்லாம்
மாடிகளாய் மாறிவிட்டன

டீ கடைகளைவிட
மருந்து கடைகள்
அதிகமாகிவிட்டது

பத்தாண்டுகளில்
எனது கிராமத்தின்
வளர்ச்சி வியக்க வைக்கிறது
ஆனாலும்
இதயம் ஏனோ வலிக்கிறது

எழுதியவர் : கொ,வை. அரங்கநாதன் (5-May-15, 2:22 am)
Tanglish : enathu giramam
பார்வை : 437

மேலே