கடிதம்
கண்ணான கண்மணிக்கு
கடல் கடந்து வாழும்
கணவன் எழுதுவது ...
வேர்வையும் ,வேதனையும்
வேரறுத்துப் போகிறது
உன் குரல் கேட்டவுடன் ....
சம்பளம் வாங்கும் போது
உள்ள சந்தோசத்தை விட
சத்தமில்லாமல் வரும்
உன் அழைப்பு மணி
சந்தோஷ சங்கீதம் ....
தனிமையின் வேதனையும்
தலைவலியின் ரோதனையும்
தகர்ந்து போகிறது
அழை பேசியில்
உன் முகம் பார்க்கையில் ...
உடல் மட்டும்தான்
உழைத்து கொண்டிருக்கிறது
உயிர் உன்னிடம்
பத்திரமாக பார்த்துக்கொள்
கண்மணியே ...!