காஷ்மீரப் பனி மலையில்
சியாச்சென்
மலை முகடு..
என் நாட்டின் எல்லைக் கோடு
இங்கே..
கொட்டும் பனி மழையில் நான்..
குதூகலத்தோடு..!
ரொட்டித் துண்டு..
குப்பியில் திராட்சை ரசம்..
குடுவைத் தண்ணீர்
தேவைக்கு ..
என்னோடு!
இரவெல்லாம்
கூடாரத்தில்..
என்னவளின்
எண்ணம்..
சிரிக்கும் என் பெண்ணின்
உருவம்..
ஆனாலும்..சிதறாமல்
எல்லையிலே
என் கவனம்..!
அங்கே உள்நாட்டில்
தலைவர்களின்
அட்டகாசம்..!
நீயா.. நானா..
சண்டை போட்டபடி ..
என் மக்கள்..!
இருக்கட்டுமே ..!
அது அவர்களது ..
சுதந்திரம் ..!
காஷ்மீர எல்லையில் நான் ..
சண்டையிட்டபடி
போட்டி வாழ்வின்
எல்லையில் அவர்கள்!
...
வாழ்க சுதந்திரம்..
பாரத் மாதாக்கி ஜே..!
ஜெய் ஹிந்த் !