போலி மதவாதிகள்
கடவுளே வந்தாலும்..
காசிருந்தால் பார்போம் நாங்கள்
காசையேதான் கேட்போம் நாங்கள்
அவன்தந்த பொருளொன்றை..
அவனுக்கே கொடுத்தவிட்டு..
உபயமெனப் பெயரெழுதி. .
உயர்ந்துகொண்ட உத்தமர் நாங்கள்
மறும்மதங்களின் பெயர்களுக்கேற்ப
மாறிக்கொண்ட பெரியவர் நாங்கள்
கடவுள்களின் பெயர்சொல்லி..
கடவுளாய் வாழும்
பணம்படைக்கும் கடவுள் நாங்கள்
-போலி மதவாதிகள்