வாழ்க்கை ஒன்றும் இல்லை
உலகை நீ ஜெயிக்க
துணிவை துணை கொள்ளடா
துணிய நீ மறந்தால்
உன்னை துரத்தும் உன் நிழலுமடா
விழிகளை எரிய விடு
உறக்கத்தை தொலைத்துவிடு
எரிமலை என்றாலும்
துணிந்து எதிர்த்துவிடு
கலக்கம் என்பதெல்லாம்
உனக்குள் தெளிவு பிறக்கும்வரை
விளக்கம் தேடி நின்றால்
வாழ்க்கை ஒன்றும் இல்லை