இவை எல்லாம் எங்கே

காலை கூவும் சேவல்கள்
எங்கே மதிய
குழம்பில் மணக்கிறதோ

இரவு அன்னையின்
நிலா சோறு எங்கே
அம்மாவாசை இரவு
கெடுக்கிறதோ

திருவிழா கூட்டங்கள்
எங்கே திருடன்
கூட்டம் அதிகம் என்பதால்
இந்த கூட்டம் குறைந்ததோ

மக்களின் பக்தி எங்கே
புத்தி வளர்ந்தது விட்டது
என்று எண்ணி தொலைந்ததோ

உண்மையான காதல் எங்கே
கல்லறையில் இழுத்து போத்தி
கொண்டு உறங்குகிறதோ

பாட்டியின் பழங்கதை எங்கே
அவை எல்லாம் பாட்டியோடு
பாடை ஏறியதோ

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (17-Apr-15, 4:09 pm)
Tanglish : ivai ellam engae
பார்வை : 100

மேலே