எனக்குள் வளரும் அதே காதல்

நிஜங்களை சுமக்கும் பூமியே
நிழலையும் சுமக்கின்றது...

நீ கொடுத்த முத்தங்களை
சுமக்கும் கன்னங்களே
நீ கொடுத்த கண்ணீரையும்
சுமக்கின்றது...

உன் வார்த்தைகளால்
வாடிய என் நெஞ்சத்தை
உன் வார்த்தைகளே
வருடிக்கொடுக்கின்றன...

மரங்களின் பலனாக
மழை...
மழையின் பலனாக
மரங்கள்...

நிலவினைத்
தொலைத்துவிடும் வானம் - பின்
நிலவால் தான்
பொழிவு பெறும் வானம்...

இவையெல்லாம்
இப்படியிருக்க...

உன்னால் தான்
எனக்குள் முளைத்தது காதல்...
நீ பிரிந்து சென்றாலும்
எனக்குள் வளர்கிறதே அதே காதல்...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (17-Apr-15, 4:09 pm)
பார்வை : 110

மேலே