கூட்டக் குடும்பம் -தொடர்கதை

கூட்டுக் குடும்பம்-2
குமரேசன் வீட்டில் உள்ளவர்களை பார்த்து ஆச்சர்யப்பட்டான் சலீம் ..சலீம் அப்புவிடம் கூறினான் இங்கே தங்கி விடலாம் என தோன்றுகிறது ..எல்லோரும் எவ்வளவு அமைதியாக தம் தம் பணிகளை செய்கிறார்கள்

அப்புவும் சலீம் சொல்வதை கேட்டு தலை அசைத்தான்..ஒரு முறை என் பாட்டி பத்து நாட்கள் தங்குவதற்கு கிராமத்தில் இருந்து வந்திருந்தாள்..என் அம்மாவும் பாட்டியும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ள மாட்டார்கள் என் அப்பா வந்தவுடன் அம்மா ஏதோ சொல்வாள் பாட்டி ஒன்று சொல்வாள் முடிவில் யாரும் சாப்பிடாமல் தூங்க சென்றுவிடுவோம் ....என் பாட்டி வந்த ஐந்து தினங்களிலேயே ஊருக்கு சென்று விட்டால் என்றான் கவலையோடு ..

ராஜா எப்படி இங்கு குளிப்பதோ தெரியவில்லை ...எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ என்று சொல்லி கொண்டு இருக்கும்போதே குமரேசன் அவர்களை நோக்கி வந்தான் ..குமரேசன் அவர்களிடம் இரண்டு குளியல் அறையிலும் யாரும் இல்லை நீங்கள் உபயோகப்படுத்திக்
கொள்ளலாம் என்றான்

கார்த்திக் அவனிடம் உங்கள் வீட்டில் என்ன விஷேசம் இவ்வளவு நபர்கள் உள்ளனர் என்று கேட்டான் ...குமரேசன் அதற்கு என்னடா இப்படி சொல்கிறாய் இவர்கள் யாரும் வெளி நபர்கள் இல்லை ..எங்கள் குடும்ப உறுப்பினர்களே நாங்கள் எப்பொழுதும் இணைந்தே வாழ்வோம் எங்கள் தலை முறையும் அவ்வாறே இருக்கும் இது எங்கள் குடும்பத்தின் சபதம் இதை எங்கள் அனைவர் மனத்திலும் விதைத்துள்ளனர் என்றான் பெருமிதமாக ..

காலை எட்டு மணிக்கு முன்பே இருபதுக்கும் மேற்பட்டோர் அந்த இரு குளியல் அறையில் குளித்து முடித்திருப்பது கார்த்தியை மயங்க வைத்தது

அவனும் அவள் தங்கை இருவர் மட்டுமே குளிப்பதற்காக நான் நீ என்று போட்டி போட்டு அடி தடியில் கூட சில நாட்கள் கழிந்துள்ளதை நினைத்து வெட்கப்பட்டான்

குமரேசன் அவர்களிடம் நானும் வந்ததில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் நீங்கள் ஏன் இவ்வளவு களைப்பாக இருக்கிறீர்கள்..வாருங்கள் குளித்து உணவருந்தி பின் நாம் படிக்கலாம் என்று அன்போடு அவர்களை அழைத்து சென்றான்

............... தொடரும் ....................

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (18-Apr-15, 8:06 pm)
பார்வை : 240

மேலே