உழைப்பே தருமாம் உயர்வு - நேரிசை வெண்பா

உலகில் இடுக்கண் உதிர்ந்து விடுமாம்
நலமாய் மனிதனும் நாடும் -- நிலையில்
மழையும் தவறாது மண்ணிற் பொழியும்
உழைப்பே தருமாம் உயர்வு .

உயர்வு விரும்பி உரிமை கிடைக்க
அயர்வு களைவாய் அதனால் -- வியர்வைப்
பொழிய இனிமையும் பூக்களாய்க் காண்பாய்
உழைப்பே தருமாம் உயர்வு .

காண்போர்ப் பொறாமையின் கண்ணுடன் நோக்கினும்
மாண்பாய் உழைத்து மகிழவே -- வீண்சொல்
பிழைப்பை ஒருபோதும் பின்பற்றாப் பண்பால்
உழைப்பே தருமாம் உயர்வு .

தினைய ளவேனும் திருத்தமாய்ச் செய்தால்
பனைய ளவாகப் பயனுறக் காண்பாய்
தழைக்கும் நிலமும் தரிசாய் இருந்தும்
உழைப்பே தருமாம் உயர்வு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Apr-15, 9:17 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 74

மேலே