ஆம்பளையா பொம்பளையா

ஆம்பளையா பொம்பளையா?

ஆம்பளையா பொம்பளையா
அடையாளம் இருக்கு.--அது
வேட்டியினும் சேலையினும்
விவரம் ரொம்ப இருக்கு.

வீரமுன்னா ஆம்பளை
மானமுன்னா பொம்பளை -ரெண்டும்
வேற வேற ஆனாலும்
விசயமெல்லாம் ஒண்ணுதான்.

வேட்டியை வரிஞ்சி கட்டி
மீசமுறுக்கி நின்னானா ஆம்பள--அய்யோ
காப்பாத்த ஆளு இல்லயான்னு
ஒப்பாரி வச்சழுதா பொம்பள.

என்ன தப்பு நடந்தாலும்
முன்ன வந்து தடுத்தான்னா ஆம்பள--பெரிய
சத்தம் எங்கயோ கேக்குதுன்னு
சட்டுனு கதவ சாத்துன்னானா பொம்பள.

உடம்ப நல்லா இறுக்கி வச்சி
உழைச்சுக் குடும்பம் காப்பாத்துனா ஆம்பள--சும்மா
புள்ள மட்டும் பெத்துக்கிட்டு
உள்ளேயே கிடந்தான்னா பொம்பள.

குடிச்சாத்தான் ஆம்பளையா
குடும்பம் பாத்தா பொம்பளையா--வாழ்க்கை
விடியலுக்கும் அடையலுக்கும்
வெவரம் என்ன புரிஞ்சிரிச்சா?

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (22-Apr-15, 9:07 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 156

மேலே