வெள்ளை மனம் தான் தந்தையே

வெளிகாட்டா பாசத்துடையவனோ,
வெள்ளை மனத்தான்....! அறநெறி கற்றுத்தந்தாய்,
தன் பிள்ளை அறியனை ஏறுவான் என கனா கண்டாய்..
தவறு செய்வான் என தெரிந்தும் பணம் தருவாய்...
எதனால்...தன் பிள்ளை எவரிடமும் கைஏந்தக்கூடாது அதனால்...
*உழைத்து தேய்ந்தாயே ஏனோ....பின்னாளிள் உன் பிள்ளை
பார்ப்பான் என்றுதானோ... என் பிள்ளை நல்லவன் புகழ்வாயே... உண்மைதான் " உலகில் பிறந்த எல்லோரும்
நல்லவர்,அவர் நிறம் உனராவிடில்" (நிறம் = நாம் பார்க்கும் விதம்) வளர்ந்தான் உன் பிள்ளை இன்று, பெற்றான் "செல்வங்கள்" நன்று... கிடத்தினான் உன்னை தின்னையில்...
டாமிக்கு இடமில்லை என்று.. * இதற்க்குத்தான் அப்பவே சொன்னேன் கேட்டாயோ...
இல்லப்பா, உள்ள காத்து வரல அதான் வெளிய வந்துட்டேன்..
பாவம்.. பிள்ளையை விட்டுக்கொடுக்கா உமக்கு...
பிட்டு கொடுக்க காத்திருக்கும் பிள்ளை...
"முதுமை மரணத்தை விட கொடுமை"

எழுதியவர் : மைசூபா (22-Apr-15, 10:19 am)
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே