காதலை உணர்ந்தேன்
எழில் மிகு இயற்கை
அழகை ரசித்தேன்
நீ அருகில் இருப்பதை
மறந்து ...
ஆர்ப்பரிக்கும் கடலின்
அழகை ரசித்தேன்
நீ அருகில் இருப்பதை
மறந்து ...
கொட்டும் அருவியின்
அழகை ரசித்தேன்
நீ அருகில் இருப்பதை
மறந்து ...
தாஜ் மகாலின்
அழகை ரசித்தேன்
நீ அருகில் இருப்பதை உணர்ந்தேன் ...

