அகன் சாருடன் ஒரு எதிர்பாரா சந்திப்பு

அலுவலகப் பணியிடையே உணவு இடைவேளை நெருங்கிய நேரம்..
உற்சாகமாய் ஒரு தொலைபேசி அழைப்பு..

தோழரே...உங்கள் இருப்பிடம் அருகே வந்து விட்டேன் .
உங்களை சந்திக்க இயலுமா..
என்று ..
கேட்ட குரல்..
தமிழின் குரல்..
தமிழன்பை தேக்கி வைத்த
தமிழ் தமையனாரின் குரல்..

இது ..
முதல் முறை நிகழும் சந்திப்பு..
அதுவும் ..
என் இடம் நோக்கிப் பாய்ந்த வெள்ளத்தின் அரவணைப்பு..
தந்தது மெய் சிலிர்ப்பு..

தேடி வரும் சமுத்திரத்தை வரவேற்கும் சிற்றோடை ஆனேன் நான்..

நதியைத் தேடி வந்த கடல் என்று சொல்ல முடியாததற்கு ..நான் நதியல்ல என்பது தான் காரணம் ..!

வந்த கடல் .. முத்துக்களை பரிசாக வழங்குவதாய்..
இரு அரிய புத்தகங்கள் தந்து வாழ்த்தியும் சென்றது..

பத்துப் பன்னிரண்டு மணித்துளிகளே அவகாசம் கிடைத்ததால்
கொத்துக் கொத்தாய் அரிய பல தகவல்களை என் நினைவு மணற்பரப்பில்
சடுதியில் ஆழமாய் பதித்துச் சென்றது..
..
ஆம்..
மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.. தன்முனைப்பற்ற
தமையனின் அன்புடன் இந்த சிற்றோடை தேடி வந்த
மகா சமுத்திரமாய் தளத்தின் மாலுமி
..
திரு. அகன் சார் ...............அவர்கள் உடன் இன்று
சற்றும் எதிரபாராமல் ... கோடை மழையினைப் போல்
ஒரு சந்திப்பு நிகழ்ந்தது ...காரணம் தமிழ் விரும்பியது.. !

நினைவில் நிற்கும் என்றும் ..இந்த சந்திப்பு!

நன்றி திரு அகன் சாருக்கும் .. தமிழுக்கும் !..இந்த தளத்திற்கும்..

மகிழ்ச்சி வெள்ளத்தில் ..நான்!

எழுதியவர் : கருணா (24-Apr-15, 3:47 pm)
பார்வை : 297

சிறந்த கட்டுரைகள்

மேலே