ஜெயகாந்தன்

ஜெயகாந்தனுடன் சந்திப்பு

ஜெயகாந்தன் கதைகளில் நான் முதல் முதலாகப் படித்தது “உறங்குவது போலும்”. ஆம் .. திருமதி ஜய கௌசல்யாவை ஜேகேயிடம் ஈர்த்த அதே கதை தான்.

திருமூலரின் வரிகளுடன் “'ஊரைக்கூட்டி ஒலிக்க அழுதிட்டு பேரை நீக்கி பிணமென்று பேரிட்ட பின், சூரையங்காட்டிடையே சுட்டிட்டு, நீரில் மூழ்கி நினைப்பொழிந்து, அனைவரும் நீங்கிக்கழிந்த பின் அவன் விழித்தான்..!” (பதிகம் : 105 முதல் தந்திரம் – 5. யாக்கை நிலையாமை பாடல் எண் : 3)
என்று தொடங்கும் கதை.

அதன் பின் அனேகமாக அவர் எழுதிய கதைகள் எல்லாம் (1978 வரை) படித்து
இன்புற்றவன் நான். முக்கியமாக், திருப்பு முனையாக, நான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கொடுத்த கதை இது. ஆனந்த விகடனில் முத்திரைக் கதையொன்றாக வந்த “உடன் கட்டை”

உடன்கட்டை கதையில், மணமகன் திருமணத்திற்கு முன் இறந்துவிட, கதைநாயகி அவனுக்காக விதவைக் கோலம் பூணுவதாகக் காட்டுகிறார்.

இதைத் தொடர்ந்து, இக் கதையின் தொடர்ச்சியாக “கற்பு நிலை” எழுதினார்.
ஒந்தக் கதைகளை நானும் என் தங்கை மதுரமும் ரசித்தோம். பின், இவற்றின் தொடராக மதுரம் ஒரு கதை வடித்தாள். அதை ஜெயகாந்தனிடமே நேரில் தர எண்ணினோம். ஜெயகாந்தனின் வீட்டு விலாசம் பேருவதற்காக மிதிவண்டியில் (bicycle) மவுண்ட் ரோடில் (இன்றைய அண்ணா சாலை) இருந்த ஆனந்த விகடன்
அலுவலகம் சென்றேன். உள்ளே ஒவ்வொருவராகக் கடைசியில் ஒருவரிடம் சென்றடைந்தேன்.

”ஜெயகாந்தன் அவர்களின் உண்மைப் பெயரும், வீட்டு விலாசமும் தர முடியுமா?”

அவர் கண்ணாடிக்கு மேல்புறமாகப் பார்த்தார். ஒன்றும் கேகவுமில்லை, சொல்லவுமில்லை. ஒரு காகிதத்தில் “ட. ஜெயகாந்தன், 26, எழும்பூர் ஹை ரோடு” என்று எழுதி என்னிடம் கொடுத்துவிட்டுத் தன் வேலையில் மூழ்கினார்.

மதுரத்தின் கதைக் கையெழுத்துப்பிரதியுடன் ஒரு கடிதமும் எடுத்துக் கொண்டு ஜெயகாந்தன் வீட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டில் இருக்கவில்லை. அவர் அன்னையாரிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.

இரண்டு நாட்களில் ஜெயகாந்தனிடமிருந்து கடிதம் வந்தது!

கடிதம் தந்த ஊக்கத்தில் மறுநாள் காலை அவர் வீட்டுக்குச் சென்றேன். பல குடித்தனங்கள் வாழும் ஒரு வீடு. அவர் இருந்த இடம் கடைசியில் இருந்தது. அவர் அன்னையார் தான் இருந்தார். ஏமாற்றத்துடன் திரும்பி வரும்பொழுது, நான் படியிறங்கவும், ஜெயகாந்தன் வரவும் சரியாக இருந்தது. கல்யாண பரிசு படத்தில் பாராட்டுவிழாவில் இருந்த உண்மை “பைரவர்” போல் மெலிந்த உருவத்தை எதிர்பார்த்த எனக்கு, ஒரு பயில்வான் உருவில் வந்த இளைஞர் ஜெயகாந்தன் என்று தோன்றவில்லை. ஆனால், அவர் என்னைப் பார்த்துத் தெரிந்துகொண்டு, வாயிற் திண்ணையில் உட்காரவைத்துப் பேச ஆரம்பித்தார்.

ஒரு சிகரெட்டைக் கொளுத்திக்கொண்டு எனக்கும் ஒன்று நீட்டினார். எனக்குப் பழக்கம் இல்லாததால் மரியாதையுடன் மறுத்தேன்.

அவர் கருத்துக்களை உற்சாகமாக்க் கூறினார். “எழுத்து என் சீவன்; ஜீவனம் இல்லை”

அவருடைய கைவிலங்கு நெடுங்கதை புத்தக வடிவில் வெளிவந்திருந்த சமயம். அதைபற்றிக் கூறினேன். “ஆசிரியர் குழு நான் எழுதினதை மாற்றிவிட்டனர்” என்று குறைப்பட்டுக்கொண்டார். ஆஙிலத்திலோ அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலோதான் பேசிக் கொண்டிருந்தார்.

உடன்கட்டை, கற்பு நிலை கதைகளைப் பற்றிப் பேசும் போது, “I Will Cry Tomorrow (Lilian Roth)” கதையைப் பற்றிச் சொன்னார். (சில நேரங்களில் சில மனிதர்கள் கதா பாத்திரம் கங்கா நினைவுக்கு வருகிறது)
பத்திரிகைகளில் தொடர் கதை என்பது வியாபார நோக்கில் இருப்பதைச் சுட்டினார். “எனக்குத் தொடர் கதை எழுத விருப்பம் கிடையாது. தொடர் கதை
என்பது பத்திரிகைக் காரர்கள் வியாபார நோக்கில் செய்வது.” பல நெடுங்கதைகள் ஒன்றுக்கு ஒன்று தொடராக எழுதுவார். (உடன்கட்டை, கற்பு நிலை போல)

வெகு நாட்களுக்குப் பிறகே தொடர் கதை எழுதினார் (சில நேரங்களில் சில மனிதர்கள், ….)

அவர் கதைகளில் இருக்கும் கருத்தாழமும், சீர்திருத்தச் சிந்தனைகளையும் வியந்தேன். ஆனால் அவரோ “எழுத்தாளன் சமூகத்தைச் சீர் திருத்த முடியாது” என்றார்!

“தமிழில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை. உங்கள் தங்கையை எழுதச் சொல்லி ஊக்கமளியுங்கள். இப்பொழுது எழுதியிருக்கும் கதை, என் கதைப் போக்குகளை நன்கு புரிந்து கொண்டு எழுதப் பட்டிருக்கிறது. வேறு சிலரிடமிருந்தும் வந்தது ஆனால் அவையெல்லாம் இப்படி இல்லை” என்று உற்சாகம் கொடுத்தார்.

சுமார் 45 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அருகில் இருந்த சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று சிற்றுண்டி அருந்தினோம். நான் பணம் கொடுக்க முன் வந்த போது, தடுத்து “How does it matter?” என்று கூறி, தானே
மொத்தக் கிரயத்தையும் கொடுத்து விட்டார்.

எழுதியவர் : முத்துசுப்ரமண்யம் (இன்னம (24-Apr-15, 8:06 am)
பார்வை : 2288

மேலே