இன்று புத்தக தினம் - நூற்கள் தினம் - பாட்டாளிகளின் விவசாயிகளின் புரட்சிக்கு அடித்தளமிடும் தினம்
இன்று புத்தக தினம் - நூற்கள் தினம் - பாட்டாளிகளின் / விவசாயிகளின் புரட்சிக்கு அடித்தளமிடும் தினம்...!
பாரீஸ் நகரில் 1995 - ம் ஆண்டு ஆகஸ்டு 25 முதல் நவம்பர்
16 -ந் தேதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28- வது மாநாட்டில் அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும்.....
புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 -ந் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 23 அன்று புத்தக தினம் கொண்டாடுவதை பொருத்தமான ஒரு விஷயமாக யுனெஸ்கோ மாநாடு கருதியது.
- இது செய்தி -
அதெல்லாம் அப்போ....
இப்ப நாம என்ன சொல்றோம்னா...?
புத்தகம் படிப்பவன் அரை கிறுக்கன் என்று சக மனிதன் சொல்வதும்...
புத்தகம் வைத்திருந்தான் இந்த மாவோஸ்ட் தீவிரவாதி என்று போலீஸ் / ராணுவம் சொல்வதும்....
புத்தகம் படிப்பவன் சமூகத்தின் துயரம் என்று சொல்வதும்....
புத்தகம் படிப்பவன் உண்மைகளை சொல்வதால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது என்று சொல்வதும்...
புத்தகம் படிப்பவன் எழுதுவதால் ஃ பத்வா என்று சொல்வதும்....
புத்தகம் படிப்பவன் பெரும்பாலும் பகுத்தறிவாளியாக இருப்பவன் எனவே பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிரானவன் என்று சொல்வதும்...
என்று இருப்பதால்....ஏனைய தினங்களைப் போலவே இதுவும் ஒரு தினம் என்று கடந்து செல்வோம்...!
- சங்கிலிக்கருப்பு -