தமிழக பகுத்தறிவாளர்கள் குறித்த மதுரைத் தமிழன் பதிவுக்கு சங்கிலிக்கருப்புவின் பதில்

தமிழக பகுத்தறிவாளர்கள் குறித்த மதுரைத் தமிழன் பதிவுக்கு
சங்கிலிக்கருப்புவின் பதில்....!

இது எனது கருத்து,
1. தமிழக பகுத்தறிவாளர்களின் கொள்கை கடவுள் எதிர்ப்பாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட ( இந்து ) மதத்தையும் அதில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் எதிர்ப்பது தவறு.

2. பூணலை அறுத்தவர்கள், முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவையும் கிழித்து எறிய துணிவு உண்டா...?

3. கடவுள் இருக்கிறார் என்று நினைப்பவர்கள் அவரவர்களின்
வழித்தலங்களில் அவரவருக்கு பிடித்த மாதிரி வழிபட்டு வாழட்டுமே,

4. அப்படி இல்லாதவர்கள் கடவுள் இல்லை நான் வழிபடுவதில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்களேன்.

5. கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் உங்களை வற்புறுத்துவா செய்கிறார்கள்.

6. பகுத்தறிவாளன் என்று சொல்வதை விட மனிதனாக இருக்க முதலில் பழகுங்கள்....
அன்புடன்
- மதுரைத் தமிழன் -

இது சங்கிலிக்கருப்புவின் பதில்கள்..

1. அந்த குறிப்பிட்ட பிரிவினரிடம் தான் அணைத்து ஏகபோக அதிகாரமும் ஆட்சியும் உள்ளன.
இந்து மதத்திற்குள் ஒளிந்து கொண்ட ஆக மிகச்சிறுபான்மையினர் எனவே தான் அந்த குறிப்பிட்ட பிரிவினரை எதிர்க்கிறார்கள்....
பெரும்பான்மை இந்துக்கள் பலன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்....எனவே தான் எதிர்கிறார்கள்...

2. பூணுலை அறுத்தது தவறு....! அதற்காக ஏன் முஸ்லிம் பெண்களின் பர்தாவை கிழித்து எறியும் துணிவு உண்டா...? என்று எதிர் வன்முறையை தூண்டுபவர்கள் எவ்வாறு சரியான சிந்தனை கொண்டவர்களாக / மனிதப்பண்பு மிக்கவனாக இருக்க முடியும்...?

3. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அவரவர் வழிபாட்டு தலங்களில் சென்று வழிபட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள்...தற்பொழுது அனைத்தும் மூட நம்பிக்கையின் உச்சத்தில் உள்ளன இந்து மத வழிபாடுகள் அனைத்துமே....

4. கடவுள் இல்லை...மூடபழக்க வழக்கம் சமூகத்தில் ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய / கருத்துக்கள் சொல்ல அரசியல் சட்டம் உரிமை வழங்கியுள்ளது...

5. கடவுள் உண்டு என்று சொல்பவர்கள் வற்புறுத்தவே செய்கிறார்கள்...
காட்டாக அணைத்து மதத்தினருக்கும் / மக்களுக்கும் பொதுவான காவல் நிலையங்கள் / நீதிமன்றங்கள் / நகர / கிராம அலுவலகங்கள் / மாநில - மத்திய அரசு நிறுவனங்களில் கோவில் பூசையும் ஆயுத பூசையும் கொண்டாடுவது....

6. பகுத்தறிவாளன் மட்டும் தான் ஆகச் சிறந்த மனிதனாக இருக்க முடியும்...

இப்படிக்கு
- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (23-Apr-15, 3:21 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 116

சிறந்த கட்டுரைகள்

மேலே